இன்று அவளைக்காணவில்லை.
இன்று அவள் முகம் இல்லை.
இன்று அவள் முல்லை முறுவல் படரவில்லை.
இன்று சூரியனே சுடுகாட்டுக்கு போய்விட்டது.
இன்று இன்னும் அவள் தரிசனம் இல்லை.
இன்று இன்னும் இந்த கம்பிகளுக்கு வெள்ளிமுலாம் இல்லை.
இன்று இன்னும் இந்த கம்பிகளை எண்ணவில்லை.
இன்று இன்னும் அந்த இமைகள் மின்னல் பூசவில்லை.
இன்று இன்னும் அந்த விழிகள் திராட்சைக் கொடி நீட்டவில்லை.
இன்று இன்னும் இன்னும்
என் லப் டப் லப் டப் அங்கு கேட்கவில்லை.
பின் எதற்கு அது?
இடித்துத்தள்ளுங்கள் அந்த சன்னலை!