வாழ்வதும் போவதும்VAAKAI.COM


  1. ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை புரிய வைக்க நினைச்சரு. எல்லாரையும் கூப்புட்டு உக்கார வச்சு, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காமிச்சாரு. அவ்வளவுதான், 'வாழ்க்கைத் ததுவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டாரு. ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒண்ணுமே புரியலை. வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் ...ததுவம் இருந்த்டப்போகுதுனு குழம்பினவன், மெதுவா குருவையே எழுப்பி கேட்டான். அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

    'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

    'பல் இருந்ததா?'

    'இல்லை.'

    'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

    - தா.கு.சுப்பிரமணியன், பட்டிமன்றத்தில் சொன்ன கதை
    See More