இரண்டு கேள்வி,ஒரு பதில்.

வெந்த கறி மணப்பதேன்?
வீரர் படை முறிவதேன்?
              ---
பெருங்காயத்தால்.
கண்ணப்பன் திருந்தியதேன்?
கந்தன் படுத்துக் கிடப்பதேன்?
             ---
கால் கட்டு போட்டதால்.
படம் அழகாய்த் தெரிவதேன்?
பண்டம் விலை குறைவதேன்?
             ----
சட்டம் போட்டதால்.
குமரன் அடி வாங்குவதேன்?
குப்பியைத் தூக்கி எறிவதேன்?
             ----
காலியானதால்.