சந்திப்போமா?

காதலர் இருவர்,பிறர் அறியாமல் சந்திக்க விரும்புகின்றனர்.காதலன் ஏற்றம் இறைப்பவன்.கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் காதலியிடம் அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்கு எப்போது வரலாம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.அதை புரிந்து கொண்ட அவள் பிறருக்குப் புரியாத வகையில் புதிரான ஒரு பாடல் மூலம் பதில் சொல்லுகிறாள்.கிணத்துத் தண்ணீர் தீர வேண்டும்.பட்ட மரம் பொருந்த வேண்டும்.பட்டணமெல்லாம் சாக வேண்டும்.அப்போது நீ வா.
இதன் பொருளை அவன் புரிந்து தன் மகிழ்ச்சியை அவளிடம் வெளிப்படுத்தினான்.உங்களுக்குப் புரிகிறதா?அதன் விளக்கம்:

கிணற்றுத் தண்ணீர் வற்றுதல் என்றால் விளக்கில் எண்ணெய் தீர்தல் என்று பொருள். பட்டமரம் பொருந்துதல் என்றால் வீட்டுக் கதவுகளை மூடுதல் என்று பொருள்.பட்டணம் சாதல் என்றால் ஊரிலுள்ள மக்கள் தூங்குதல் என்று பொருள்.

அதாவது வீட்டில் ஏற்றி வைத்த விளக்கில் எண்ணெய் தீர்ந்து அணைந்தவுடன்,பட்ட மரத்தில் செய்த கதவுகளை அடைத்தபின்,ஊரிலுள்ள மக்கள் எல்லாம் தூங்கியவுடன்  நீ வரலாம்.