"மனத்தில் அமைதி இல்லையா? ஷ்ரீதரனுக்கா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டபாஸ்கரன், "அவன் மிகவும் சாந்த சுபாவம் கொண்டவனாயிற்றே! தவிர, எப்போதும் உற்சாகமாக இருப்பவன் அவன்! அவனுக்கு எப்படி மன அமைதி இல்லாமல் போகும்?" என்றான். "பார்ப்பதற்கு அவன் அமைதியாகத் தெரிகிறான். ஆனால், அவன் மனத்தில் ஒரு எரிமலை கனன்று கொண்டே இருக்கிறது!" என்ற குரு, "ஷ்ரீதரா! உனக்கு ஒரு லேகியம் தருகிறேன். அதை இரண்டு வாரம் சாப்பிடு. உன் வேலையை மறந்துவிட்டுஉன் மனத்தை பிரச்சினைகள் இல்லாத உல்லாசமான பொழுதுபோக்கில் ஈடுபடுத்து! தோட்டம் போடுவது ஒரு நல்ல பொழுதுபோக்கு. உன்னுடைய வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்து, மலர்ச்செடிகளைப் பயிரிடு. காலையும், மாலையும் தோட்டத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்! உன்னுடைய நோய் குணமாகி விடும்!" என்றார்.
அடுத்த இரண்டு வாரமும், தன் குரு கூறியபடி தன் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, ஷ்ரீதரன் முழுமனத்துடன் தோட்ட வேலையில் ஈடுபட்டான். இரண்டு வாரத்திற்குப் பிறகு, ஷ்ரீதரன் தன் குருவை சந்தித்தான். அவனைப் பரிசோதித்த குரு, "முன்னைவிட நீ தேறிஇருக்கிறாய்" என்றார்.
"ஆமாம், குரு!" என்று ஷ்ரீதரன் பதிலளித்தான். "நான் இப்போது கொடுக்கப்போகும் லேகியத்தைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிடு. அதிருக்கட்டும்! உன்னுடைய தோட்டம் எந்த நிலையில் இருக்கிறது?" என்றார் குரு. "செடிகள் நன்றாக வளர்ந்து உள்ளன.