உங்கள் தோழனோ தோழியோ ஒருவகை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை எவ்வாறு கண்டுகொள்வது?
வழக்கமாக அதிக விருப்பத்துடன் செய்யும் செயல்களை தவிர்ப்பது, வீட்டிற்கு திரும்ப தாமதமானால் ஒருவித அமைதியின்மைக்கு உள்ளாவது, மற்றவர்களுடன் பேச பயப்படுவது, தனிமையில் அதிக நேரம் செலவழிப்பது, தன் துணைவன்/துணைவியை இன்னும் அதிகமாக திருப்பதி படுத்த, அவர்கள் விரும்பும் வண்ணம் காரியமாற்றுவது போன்றவை சில கார்ணிகளாகும். துணவன் அல்லது துணைவிக்கு பிடித்த செயல்கள் கேளிக்கைகளில் மகிழ்ச்சியோடு பங்கு கொள்வது வேறு, அவர்களை திருப்தி படுத்தாவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்துடன் செய்வது வேறு. உறவு முறைகளில் சமன்பாடான மதிப்பும் மரியாதையும் நட்பும் இருக்கும் இடத்து பயத்திற்கு தேவையிருக்காது.
வன்முறையாளாரிடமிருந்து உறவை துண்டிப்பது மிகவும் கடினமான செயல். எப்போது ஒரு பாதிப்புக்கு உள்ளானவர் நீங்க வேண்டும் என்றூ நினைத்தாரோ அதன்பின் ஒரு சரியான நேரத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்வது மிக முக்கியம். அவசரமாக வெளியேறி திட்டம் எதுவும் இல்லாமல் இன்னும் காயப்படுபவர் அதிகம். இதில் பலர் கொலை செய்யப்படுவதும் உண்டு.ஏனென்றால் வன்முறைக்கு பழக்கமான ஒருவர் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் தன்னை மீறி காரியமாற்றுவதும், வெளியேறினால் தன் இன்னொரு முகம் மற்றவருக்கும் தெரிந்துவிடும் என்பதும் இன்னும் அதிக சினத்தை உண்டு பண்ணும். வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தில் மிகவும் உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அதன்பின் தனக்கான ஒரு பாதுகாப்பு கூடு(safety nest) ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தன் பெற்றோரிடம் தன் துணைவன்/துணைவி பற்ரிய உண்மையை ஆதாரங்களுடன் சொல்லி அவர்கள் நம்பிக்கையை பெறவேண்டும். முக்கியமான வன்முறையாளருக்கு இது தெரியாமல் ரகசியமான பாதுகாக்க வேண்டியது அவசியம்.உங்கள் நிலை பற்றி உங்களை விட சிறப்பாக வேறு யாரும் அறிய முடியாது. எனவே இந்த சமயத்தில் எந்த விதமான emotional blackmailக்கும் இடம் தராமல் உறுதியாக இருப்பது முக்கியம். நீ இதை செய்தால் உன் தம்பி தங்கை வாழ்க்கையை நினைத்து பார்த்தாயா, நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் போன்றா வழக்கமான பயமுறுத்தல்கள் கேட்க தேவையில்லை. அவர்களின் நலனில் உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பபர்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். ஒருவருக்காக இன்னொருவர் வாழ்க்ககயை பலி கொடுக்க நினைப்பதும் கேட்பதும் தவறு.
இது கடினமான காரியம்தானே தவிர முடியாத ஒன்றில்லை. முதலில் வெளியேற முடிவு செய்ததற்கே இவர்களை பாராட்ட வேண்டும். முடிவில் உறுதியாக இருக்க துணையும் ஆறுதலும் தரவேண்டியது மிக்க அவசியம்.
இதுவரை விட்டு விலக்கி இருந்த நெருங்கிய உறவினரிடம் உண்மையாய் பேசி உதவி தேடுதல் அவசியம். உயிருக்கு ஆபத்து என்பதையும் எடுத்து சொன்னால், உடன் பிறந்தவரும் மற்றவரும் நிச்சயாக உதவுவார்கள். அதன்பின் வெளியேறுவது நிச்சயம் ஒருவலுவை தரும்.
இந்த சமயத்தில் கோபம், வருத்தம், சுய மதிப்பின்மையும் அழுகையும் ஆ த்திரமும் வரும். முடிவு சரியில்லையோ என்ற குழப்பமும், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற விரக்தியும் வரும். முதலில் உறவை விட்டு நீங்கிவிட்டால் பிறகு சரிப்படுத்துவதும் மனநலம் பெறுவதும் எளிது.
உங்கள் தோழரோ தோழியோ இவ்வகையில் துன்புற நேர்ந்தால், அவர்கள் சொல்வது அத்தனையும் குழப்பமாக இருந்தாலும் புரிந்து கொள்வதும் அனுசரணையாக இருப்பதும் முக்கியம்.
தோழி/தோழன் சொல்வதை கேட்டவுடன் பெரும்பாலோர் உடன டியாக அவர் துணவரை அவதூறு சொல்வதும், அப்படியான செய்திகளை தங்களை அறியாமலே பரப்பவும் கூடும். தயவு செய்து அதை தவிர்க்க முயலுங்கள். வன்முறையாளார் பற்றி சொல்லும் எந்த செய்தியும் அவருக்கே சென்று சேரவும் எச்சரிக்கை விடுக்கவும் கூடும். மேலும் உறவை விட்டு வர நினைப்பவர் செலுத்திய அன்பு உண்மையானது என்ற போது அது அவர்தம் முடிவை மாற்றிவிட கூடும்.
அதேபோல வன்முறையாளரையோ பாதிக்கப்பட்டவரையோ குற்றம் சொல்லாதீர்கள். சுழலை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் உதாரணமாக அதிகமான தொலைபேசிகள் அன்பை விட ஒருவித பொஸஸிவ் தன்மையை காட்டும். அதேபோல எல்லா நேரமும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பது ஒருவித அப்ஸெஷன ஆகும்.
எதையும் தீர்மானிக்கவோ அல்லது நிலைப்பாடு எடுப்பதோ கூடாது. கவனமாக கேட்டு, ஆதரவு தருவதும் எல்லா நேரத்திலும் நண்பனாய் உடன் இருப்பது மட்டுமே நல்ல செயல். இன்னொருவருக்கான முடிவை எடுப்பதோ முடிவெடுக்க தூண்டுவதோ தவறு.