தர்மம் செய்திருக்கின்றாளா"VAAKAI.COM


    1. தருமமே செய்ய விரும்பாத கிழவி அவள். இறக்கும் தறுவாயில் யாரவது குடிதண்ணீர் கேட்டாலும் தர மறுப்பவள்.
      வயதான காலத்திலும், தன் சொந்த உபயோகத்திற்காக, உரலில் நெல்லை உலக்கையால் குத்திக் கொண்டிருந்தாள். அப்போது "அம்மா, பிச்சை
      போடுங்க" என்ற குரல் கேட்டது. கிழவி முதலில் வாயலே "போ போ" என்று விரட்டினாள். வந்த பிச்சைக்காரன் போகவில்லை. தன் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடி கேட்டுக் கொண்டிருந்தான்.

      கோபமான கிழவி, ...உலக்கையை தூக்கி, "போ போ" என்று விரட்டினாள். வேறு வழியில்லாமல், பிச்சைக்காரன் நகர்ந்தான்.
      சிறுது காலம் கழித்து, கிழவி மரணமடைந்தாள். எமதூதர்கள் இழுத்துச் சென்றனர். எமதர்மன், சித்ரகுப்தனிடம், ஏதாவது தர்மம் செய்திருக்கின்றாளா"
      என்று கேட்டார்.

      சித்ரகுப்தன் தன் பேரேட்டைப் புரட்டியபடி..... ம்ம் ஏதுமில்லை...ஆ...! ஒரு சமயம் பிச்சைக்காரனை உலக்கையால் துரத்தும்
      போது, அதில் ஒட்டியிருந்த ஒரு மணி அரிசி பிச்சை பாத்திரத்தில் விழுந்தது!"
      என்றார்.

      "ஆ! சரி, ஒரு கண நேரம் சிவதரிசனம் கிடைக்கட்டும்! என்றார்.