- தன்னுடைய குற்றங்கள், பலவீனங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய-தவறுகளை உணர மறுப்பது தான் இதற்கு காரணம்.
எத்தனை நல்ல நூல்களை படித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம்-உணர வேண்டுமானால், தீவிரமாக சிந்திக்க வேண்டும். அப்போது மெய் உணர்வு நம்முள் மலர தொடங்கும்