தன்னம்பிக்கை வரிகள் VAAKAI.COM

  1. முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் மற்றவர்கள் மத்தியில் கேவலமாகிவிட்டதே என்று கருதாமல், கரையை தொட நினைக்கும் கடல் அலைகளின் முயற்சிபோல் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.
    ♥ குடையினால் சூரியனை எப்படி மறைக்க முடியாதோ அதுபோல தன்னம்பிக்கை உள்ளவரை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது.
    ♥ தவழும் குழந்தை நடக்கும் போது, பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்க முயற்சிக்கும். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது தற்காலிகம்தான். தொடர் முயற்சி ஒருநாள் வெற்றி தரும் என்று பெரியோர்களுக்கு சொல்லாமல் செயலில் காட்டுகிறது குழந்தை