Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

tamil motivational books


motivational stories in tamil


motivational quotes in tamil


tamil motivational words


tamil motivational


முதல் தன்னம்பிக்கை VAAKAI.COM


  1. ஒரு மனிதனின் முதல் தன்னம்பிக்கை, 

    இம்முதல் கை இல்லையெனில்

    மனிதனின் வலக்கை, இடக்கை

    இவையிரண்டும்

    உபயோகமில்லா "கை"யே...

இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ! VAAKAI.COM


  1. ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார...். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் ஜூடோவில் ஒரே ஒரு அசைவை மட்டுமே அவனுக்க கற்அக் கொடுத்திருந்தார்.

    ஒரு நாள் நிகிடோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் மெதுவாக “மாஸ்டர், இந்த அசைவைத் தவிர நீங்கள் வேறு அசைவுகளை ஏன் எனக்குக் கற்று தரவில்லை.’ “நீ இந்த ஒரு அசைவை மட்டும் தினமும் பயிற்சி செய்து வா, போதும். வேறு எதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆசிரியர் பதிலளித்தார்.

    ஒன்றும் புரியாத சிறுவன் நிகிடோ, ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்து, அந்த ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். ஆனால் நிகிடோவோ, தனக்குத் தெரிந்த அந்த ஒரே ஒரு அசைவை மட்டுமே உபயோகித்து அவரை எளிதாகத் தோற்கடித்தான். தனது வெற்றியை நம்ப இயலாத நிகிடோ, இறுதிப் போட்டிக்குத் தயரானான்.

    இம்முறை அவருடன் ஜூடோ சண்டை போட இருந்தவர், உருவத்தில் பெரிவராகவும், வலிமையானவராகவும், அதிக அனுபவமுள்ளவராகவும் தோன்றினார். சிறிது நேர சண்டைக்குப் பின், நிகிடோ சோர்வுற்றதை கவனித்த நடுவர், அவனுக்கு அடிபட்டு விடப் போகிறதே என்ற கவலையில், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.

    “வேண்டாம், அவன் தொடர்ந்த சண்டை போடட்டும்; ஒன்றும் ஆகாது’ என்று நிகிடோவின் மாஸ்டர் உறுதியாகக் கூறினார். போட்டி மீண்டும் துவங்கியபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிகிடோவுக்கு எதிராக விளையாடியவர், கையில்லாத சிறுவன்தானே, என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என்று சற்றே அலட்சியமாகிவிட, நிகிடோ அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தனக்குத் தெரிந்த அந்த ஒரே அசைவால் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்தான். பிறகென்ன, நிகிடோ அப்போட்டியை மட்டுமல்லாமல், அத்தொடரையே கைப்பற்றி, வெற்றிவீரனானான்.

    வீடு திரும்பும் வழியில், இறுதிப் போட்டி வரை அவனுக்கு எதிராக விளையாடியவர்களின் பல்வேறு அசைவுகளைப் பற்றி நிகிடோவின் மாஸ்டர், அவனுக்கு விளக்கிக் கொண்டே வந்தார். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நிகிடோ, அவரிடம் கேட்டான்: “மாஸ்டர் ஒரே ஓர் அசைவை மட்டுமே வைத்துக் கொண்டு என்னால் எதிராளியை எப்படி எளிதில் வீழ்த்த முடிந்தது?’

    “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஜூடோவின் மிகக் கடினமான அசைவை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, நீ அதில் மிகவும் தேர்ந்து விட்டாய். இரண்டாவதாக உனது அசைவை எதிர்கொள்ள, உனது கையைப் பிடித்துத் தடுப்பதுதானா ஜூடோவிலே உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு இயக்கம். உனக்கு இடது கை இல்லாததால், எதிராளிகளுக்கு அதை செய்ய முடியாமல் போனது. எனவே உனது பலவீனத்தால் தான் உன்னால் எளிதாக வெற்றி பெற முடிந்தது’ அதாவது நிகிடோவின் மிகப்பெரும் பலவீனம் அவனுக்கு மிகப்பெரும் பலமாக மாறி, அவனை வெற்றி பெறச் செய்தது.

    சில நேரங்களில் நம்மிடம் சில பலவீனங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு, சூழ்நிலைகளையும், பிறரையும், அதிஷ்டத்தையும், ஏன், நம்மையுமே கூட குறை கூறிக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நாள் நமது பலவீனமே நமக்கு பலமாக மாறக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை.

    நாம் ஒவ்வொருவருமே விசேஷமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள்தான். எனவே, நமக்கு பலவீனங்கள் இருப்பதாக நினைக்காமல், நம்மை நாமே தாழ்வானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ நினைத்தக் கொள்ளாமல், நமக்கு இறைவன் தந்த வாழ்க்கை என்ற வரத்தை முழுவதுமாக உபயோகித்து, அதில் நம்மால் முடிந்த அளவு வெற்றி பெற முயற்சிப்போமாக!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்னம்பிக்கை,VAAKAI.COM


  1. 500 ரூபாய்

    200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் ந...ோட்டைக் காட்டி
    ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

    ... கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

    பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
    அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
    “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் ...இருக்கிறதா?” என்றார்கள்.
    அனைவரும் கையைத் தூக்கினர்.

    அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
    “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
    அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

    அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
    அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
    தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
    நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

    இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
    அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
    தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
    ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க

மறந்தான்.. மறந்தான் VAAKAI.COM


  1. ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். மிகச் சிறிய பையன். விளையாடத் துணை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு அழகிய கானகம். அங்கே ஒரு கனி தரும் மரம் இருந்தது. அவன் அங்கே சென்றான். மரத்தில் ஏறி விளையாடினான். பழங்களைப் பறித்து உண்டான். மரத்தின் கீழே இளைப்பாறினான். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அவனைப் பார்த்து அந்த மரமும் மனம் மகிழ்ந்தது. அவன் அடிக்கடி வருவதும் விளையாடுவதும் இருவருக்கும் உவகை தரும...் ஒரு நிகழ்வாக இருந்தது. மரம் அவன் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும். தன் கனிகளை அவன் உண்பது அதற்கு சொல்லொணா மகிழ்வு தந்தது. அவன் மரத்தின் மேல் ஏறி விளையாடும் போது மரமும் வாகாக தன் கிளைகளைத் தாழ்த்திக் கொடுக்கும். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் பார்க்க வராவிட்டாலும் இருவருக்கும் ஒரு ஏக்கம் பிறக்க ஆரம்பித்து விட்டது. நாளடைவில் மரமும் அந்த சிறுவனும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப் பின்னர் சில மாதங்களாக அவன் வராதது கண்டு மரம் வருத்தமுற்றது. தன் கிளைகளை சுழற்றி சுழற்றி அவன் வருகையை எதிர் பார்த்து நின்றது. அதற்கு வருத்தமாகவும் இருந்தது. சில நாட்கள் கழித்து அந்த சிறுவன் வந்தான். முன்பை விட வளர்ந்திருந்தான். ''வா... வா. வா. உனக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தேன் தெரியுமா. வா. வந்து என் மேல் ஏறி விளையாடு.கனிகளை உண்டு மகிழு!'' என்றது மரம் ஆவலுடன்.

    பையன் சொன்னான், '' எனக்கு அதில் விருப்பம் இல்லை மரமே. நான் பெரியவனா வளர்ந்துட்டேன். ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டேன். எனக்கு விளையாட பொம்மைகள் தான் வேண்டும். ஆனால் அவற்றை வாங்க என்னிடம் பணம் இல்லையே.' என்றான் வருத்தத்துடன்.

    மரம் அவனது வருத்தத்தை கண்டு தானும் வருந்தியது. மரம் அவனிடம் சொன்னது: ''அதனால் என்ன, சிறுவனே, என் கனிகளை கொண்டு போய் சந்தையில் விற்று விடு. கிடைக்கும் பணத்தில் உனக்கு தேவையான பொம்மைகளை வாங்கி விளையாடு'', என்றது. பையனும் மரம் சொல்லியபடியே செய்தான். கிடைத்த பணத்தில் பொம்மைகள் வாங்கி விளையாடினான். மறுபடியும் நீண்ட நாட்களாக பையன் வராததைக் கண்ட மரம் சோகமாய் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் வரும் வழி நோக்கிக் காத்திருந்தது.

    மிக நீண்ட நாட்கள் கழித்து அவன் வந்தான். மரத்துக்கு ஏக குஷி. வா.. வா. என்ன ஆயிற்று? ஏன் முன்னைப் போல நீ வருவதில்லை. என்னுடன் விளையாடுவதில்லை? என்று ஆர்வத்துடன் கேட்டது மரம். பையன் சொன்னான்: ''மரமே நீ கொஞ்சம் கூட மாறவே இல்லையா? நான் இப்போ படிப்பு முடிச்சு பட்டதாரி ஆயிட்டேன். மரத்தில் ஏறி விளையாட நான் என்ன பச்சைக் குழந்தையா? எனக்கு என் குடும்பத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு இருக்கு. வீடு கட்ட கொஞ்சம் மரம் தேவை. என்ன செய்வது என்று புரியவில்லை'' என்றான் வருத்தத்துடன். அவனது வருத்தத்தைக் கண்ட மரம், ''நீ ஏன் வருத்தப் படுகிறாய்? என் கிளைகளில் கொஞ்சம் வெட்டிக்கோ. அவ்வளவுதானே? இதுக்கு போய் ஏன் இந்த வருத்தம்?'' என்று கேட்டது தன் கிளைகளை அசைத்தபடி. அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தின் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டு சென்றான்.

    வழக்கப்படி அவன் வராமல் போகவும், மரம் மிகவும் சோகமாக அவன் வரவை எதிர் நோக்கி காத்திருந்தது. பல வருடங்கள் உருண்டோடின. அவன் வந்தான். அவனைப் பார்த்த மரம், மகிழ்ச்சி அடைந்தது. '' வா. வா. இப்பத்தான் வழி தெரிந்ததா? எப்படி இருக்கே? ஏன் வருத்தமா இருக்கே? சொல்லு என்ன வேணும் உனக்கு? கேளு, என்னால முடிஞ்சதை செய்றேன். நீ வருந்துவதை பாக்க எனக்கு சகிக்கலை'' என்றது.

    அதைக் கேட்ட அவனும், ''மரமே, எனக்கு படகு ஒண்ணு செஞ்சு ஓட்டணும் போல ஆசையா இருக்கு. அதுக்கு மரம் வேணுமே! நான் எங்கே போவேன் அவ்வளவு பணத்துக்கு!.'' என்றான் வருத்தத்துடன். மரம் உடனே, அவ்வளோ தானே. என்னை வெட்டிக்கோ, என்னை படகா செஞ்சிக்கோ. சந்தோஷமா இரு. உன் மகிழ்ச்சிதான். என் மகிழ்ச்சி'' என்றது.

    அவன் மரத்தை அடியோடு வெட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்றான். தன் நண்பனுக்கு இந்த அளவிலாவது உதவ முடிந்ததே என்று மரத்துக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. மரத்தின் அடிக்கட்டை மட்டும் வேர்களுடன் மிச்சம் இருந்தது. பல மாதங்கள் கழித்து மீண்டும் அவன் வந்தான். மிகவும் சோர்வாக இருந்தான். தளர்ந்து போய் இருந்தான் அவன். மரம் அவனைப் பார்த்து கேட்டது, ''ஏன் என்ன இவ்வளவு சோர்வா இருக்கே? உனக்கு வேண்டிய அளவுக்கு பழம் தர கூட இயலாத நிலையில் நான் இருக்கிறேனே'' என்றது வருத்தத்துடன். அவன் சொன்னான்: ''ஏ மரமே. கவலைப் படாதே. பழம் தின்னும் நிலையில் நான் இல்லை. என் எல்லாப் பற்களும் விழுந்து விட்டன'' என்றான். ''நீ ஏறி விளையாட எனக்கு கிளைகளும் , மரமும் இல்லையே, நான் உனக்கு எப்படி உதவுவேன்?'', என்று வருந்தியது மரம். அவனோ, ''எனக்கு அதற்கெல்லாம் தெம்பு இல்லை மரமே. எனக்கு ஓய்வு தான் தேவை'' என்றான்.

    மரம் சொன்னது: ஆஹா, அவ்வளவு தானே, வா என் கட்டை மேல் அமர்ந்து கொள், கொஞ்சம் வேர்கள் உள்ளன அல்லவா அவற்றை கூட நீ கால் வைக்க பயன் படுத்திக் கொள்ளலாம். ஏதோ இந்த மட்டிலாவது என்னால் உனக்கு உதவ முடிந்ததே'' என்று, மகிழ்வுடன் கூறியது அந்த மரத்தின் அடிப்பகுதி. அவன் அதன் மேல் அமர்ந்து கொண்டான். ஓய்வெடுத்தான். மரத்துக்கு ஏகப் பட்ட மகிழ்ச்சி. இந்த அளவிற்காவது அவனுக்கு உதவ முடிந்ததே என்று.

    நான் கற்ற பாடம்: நம் ஒவ்வொருவருக்கும் பிரதி பலனை எதிர் பாராமல் தன்னையே வருத்திக் கொண்டு உதவும் மரங்கள் இருக்கின்றன. அம்மா, அப்பா, நண்பர்கள், ஆசிரியர்கள் என்று. நாம் அவர்களிடம் இருந்து எவ்வளவோ பெற்றுக் கொண்டிருக்கிறோம். பெற்றுக் கொண்டே இருக்கிறோம். திரும்ப எதை தந்திருக்கிறோம்? அவர்கள் வயதான காலத்தில் அவர்களுக்குக் குறைந்த பட்சம் நம் அன்பையாவது தந்திருக்கிறோமா? சமூகத்திற்கு நாம் நிறைய கடன்பட்டிருக்கிறோம். பெற்றதில் மகிழ்கின்ற நாம் தந்தவரை நன்றி பாராட்டுகிறோமா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலோரது பதிலாய் இருக்கும்.

    ''மரந்தான்.. மரந்தான்...
    ஏனோ அதனை மனிதன்
    மறந்தான்.. மறந்தான்.'

வாழ்க்கையை ஒரு வேட்டை VAAKAI.COM


  1. என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

    ''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த ...நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

    ''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

    ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

    எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

    அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

    வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

    வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

    - சுவாமி சுகபோதானந்தா.

வாய்ப்பு VAAKAI.COM



  1. இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

    நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம்... கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

    வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

குறையா நிறையா?VAAKAI.COM



  1. ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்
    தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

    தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு
    நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து
    செல்வான்.

    இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்
    வீட்டிற்கு வரும...் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

    குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து
    எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

    இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன்
    எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

    "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும்
    தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு
    மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

    அதன் எஜமானன் கூறினான்.

    "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்
    அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது
    எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து
    வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு
    தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை
    அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

    இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப்
    பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

இந்த வயதிலும் உங்கள் சுறுசுறுப்பு !!!!!VAAKAI.COM


  1. ஒரு முதியவர் அவருக்கு வயது 98
    ஆனாலும் அவர் இளமைத்துடிப்போடு
    இருந்தார் ,பல பொதுக் காரியங்கள்,,மக்களுக்கு உதவுதல்
    என்று மிகவும் உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருந்தார்
    அவருடைய 98 ஆவது பிறந்த நாளில்
    அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர் அவரிடம் வந்து
    அய்யா நான் தங்களை பேட்டி எடுத்து
    எங்கள் பத்திரிகையில் உங்களப் பற்றி எழுதப் போகிறேன
    ் என்று கூறிவிட்டு பல புகைப் படங்களையும் எடுத்து விட்டு
    இந்த வயதிலும் உங்கள் சுறுசு...றுப்பு எனக்கு வியப்பளிக்கிறது
    அதன் ரகசியம் என்ன என்று கேட்டார் நிருபர்
    அப்படியே ஒரு வேண்டுகோள் உங்களது
    அடுத்த பிறந்த நாளுக்கும் நானே உங்களைப் பேட்டி
    எடுக்க வருவேன் என்றார்
    அதற்்கு அந்த முதியவர் நீ இருந்தால் வா என்றார்
    அப்போது புறிந்தது அந்த முதியவரின் தன்னம்பிக்கையும்
    சுறுசுருப்புக்கும் காரணம்
    நிருபர் அதிர்ந்து நின்றார்

    உனக்கும் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்றுதான்
    அப்படி சொன்னேன்
    நிச்சயமாக நீயே வா என்றார் முதியவர்

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி! VAAKAI.COM


  1. மகந்தன் என்பவன் மிகப்பெரிய வியாபாரி. நல்ல வழியிலும், கெட்ட வழியிலுமாய் பணத்தைச் சம்பாதித்து கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தான். எப்படி சம்பாதித்தாலும், யாருக்காவது தர்மம் செய்ய வேண்டும், கோயில் காரியத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு அறவே கிடையாது. அதே நேரம் தன் சுகத்துக்காக எக்கச்சக்கமாக செலவிடுவான். வணிக விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு தன் வண்டியில் செல்வான். செல்லும் வழியில்... ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அக்கோயிலில் தவறாமல் வழிபடுவான். பிரார்த்திக்கும் போது, பிள்ளையாரே! நான் உனக்கு மாதம்தோறும் நூறு தேங்காய் உடைக்கிறேன். ஆனால், எனக்கு நீ மாதம் லட்சம் பொன் வருமானம் வரச்செய்ய வேண்டும், என்று பேரம் பேசுவான். பிள்ளையார் இவனைக் கவனித்துக் கொண்டே இருந்தார். அவனுக்கு புத்தி கற்பிக்க முடிவு செய்தார். அந்த கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் இருப்பான். அவனுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டு. பிள்ளையாரே! எப்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ, என் கை, கால்களை முடமாக்கி, பிச்சை எடுக்க வைத்து விட்டாய். இதைக் கொண்டு மனைவி, பிள்ளைகளுக்கு கொடுத்து, நானும் சாப்பிட போதவில்லையப்பா! என் பாவங்களை மன்னித்து எனக்கு நல்வழி காட்டு, என கண்ணீர் விட்டு பிரார்த்திப்பான்.

    ஏழையின் கண்ணீர் விநாயகரின் நெஞ்சைக் கரைத்தது. ஒருநாள் வியாபாரி கோயிலுக்கு வந்தான். அப்போது அவன் காதில் மட்டும விழும்படியாக ஒரு அசரிரீ குரல் ஒலித்தது. நான் தான் பிள்ளையார் பேசுகிறேன். அதோ, இருக்கிறானே, பிச்சைக்காரன். அவனுக்கு இன்று மாலைக்குள் ஒராயிரம் பொற்காசு கிடைக்கப் போகிறது, என்றது அக்குரல். வியாபாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த பிச்சைக்காரனுக்கு கிடைக்கும் பொற்காசுகள் அனைத்தையும் பறிக்க திட்டமிட்டான். வேகமாக பிச்சைக்காரனிடம் போய், ஏனப்பா! உனக்கு எல்லாரும் சாதாரண நாணயங்களைப் போடுகிறார்கள். நான் ஒரு தங்கக்காசு தருகிறேன். ஆனால், இன்று மாலை வரை உனக்கு கிடைக்கும் வருமானத்தை எனக்கு தந்து விட வேண்டும், என்றான். பிச்சைக்காரனுக்கு சந்தோஷம். மாலை வரை பார்த்தாலும், ஒரு பிடி அரிசி வாங்கக்கூட தேறாத அளவுக்கு சில்லறைகள் தான் இதில் விழும். இவனோ தங்கமே தருகிறேன் என்கிறான். ஆஹா...இதைக் கொண்டு ஒரு மாதம் சுகமாக வாழலாம், என கற்பனையில் ஆழ்ந்தான். மாலையும் நெருங்கியது. யாரும் பிச்சைக்காரன் தட்டில் ஆயிரம் பொற்காசைப் போடவில்லை. அவனுக்கு கோபம் வந்து விட்டது.

    பிள்ளையார் அருகில் போனான். ஏ, பிள்ளையாரே! பொய்யா சொல்கிறாய். என்னை ஏமாற்றி விட்டாயே, எனக்கூறி அவர் முகத்தில் ஓங்கி அடித்தான். பிள்ளையார் தன் தும்பிக்கையால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். இது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அவன் வலி தாளாமல் அழுததைப் பார்த்து, வியாபாரி பக்தி முற்றி, தன் கஷ்டத்தை அழுது கொண்டே பிள்ளையாரிடம் சொல்வதாக நினைத்துக் கொண்டனர். பிள்ளையார் அவனிடம், நீ உடனே ஆயிரம் பொன்னை அந்த பிச்சைக்காரனுக்கு கொடு. இல்லாவிட்டால் உன்னை இப்படியே கொன்றுவிடுவேன், என்றார். மனமில்லாவிட்டாலும், உயிரைக் காப்பதற்காக, அவன், அங்கிருந்த பக்தர்கள் மூலம் தன் மனைவியை பொற்காசுகளுடன் வரும்படி சொல்லி அனுப்பினான். அவளும் காசுடன் வந்தாள். பிச்சைக்காரனுக்கு அதைப் போடும்படி சொன்னான். அவளும் போட்டாள். விநாயகர் பிடியை விட்டார்.

    இறைவனிடம் காசு பணம் கேட்டு பிரார்த்திப்பதில் தவறில்லை. ஆனால், அது நம் நியாயமான சுய உழைப்பாக இருக்க வேண்டும். அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி!

நம்பிக்கையை விடவே விடாதே! VAAKAI.COM


  1. ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பதöன்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும்.
    மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். ...அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் அவற்றை சங்கிலியில் இருந்து விடுவித்து கயிற்றில் கட்டி விடுவான். யானைகளும் இனி தப்பித்து என்னாகப் போகிறது என அங்கேயே நின்றுவிடும்.
    ஒருமுறை, தன் மகனுடன் வேட்டைக்கு வந்த ஒரு அரசன், ""குட்டி யானைகளை சங்கிலியிலும், பெரிய யானைகளைக் கயிற்றிலும் பிணைத்துள்ளாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்து விடுமே!'' என்று வேடனிடம் கேட்டான்.
    ""மன்னா! கயிற்றில் பிணைக்கப்பட்ட இந்த யானைகள், குட்டியாக இருந்த போது சங்கிலியில் தான் பிணைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு இவ்விடம் பழகி விட்டதால், பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து விட்டன. எனவே, கயிற்றில் பிணைத்துள்ளேன்,'' என்றான்.
    இந்த யானைகளைப் போல், நம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது. இலக்கை எட்ட ஆரம்பத்தில் என்ன முயற்சி எடுத்தோமோ, அதை விட அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

இலவசமாக உணவு கிடைக்காது VAAKAI.COM


  1. ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்.

    ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:-

    அறிஞர் பெருமக்களே!

    உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே ...அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த
    என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்"

    அறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம்,

    " ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை" என்று கருத்துத் தெரிவித்தனர்.

    மனம் மிக மகிழ்ந்த ராஜா, "அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்' என்றார்.

    அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர்.

    ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன் ,

    "அரசர ்பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்"என்று கூறி தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.

    ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, "உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன்.

    என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

    அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

    மகிழ்ந்து போன ராஜா மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார்.

    "ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா! இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

    அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

    அதைப் படித்துப் பார்த்த ராஜா," ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே. உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன?"

    அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர்.

    அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார். "இதை.. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.

    எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே!

    இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்" என்று மகிந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான்.

    அந்த வாசகம் என்ன தெரியுமா?

    "இலவசமாக உணவு கிடைக்காது" (There is no free lunch)

    என்பது தான் அந்த வாசகம்!

மரணத்தின் விளிம்பில் VAAKAI.COM


  1. மரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.

    "ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்ன...தால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.

    மனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது. ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிராதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன?

    "அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.

    "அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா?" இது மகள்.

    "உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்" - இது மனைவியின் புலம்பல்.

    குடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது. உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் "விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ" என்று சொல்லி விட்டுப் போனார்.

    "ஏண்டா கேசட் இருக்கா?" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.

    குடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார். சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

    "சார் எப்படியிருக்கார்" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது "அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்" என்று டிரைவர் சொன்னார். அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் "இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ" என்று சொன்னார். எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....

    அவர் மனைவி சொன்னாள். "டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்.." அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.

    "என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்"

    அந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

    அருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது. அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது. வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது

    அந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.

மனிதர்களது தகுதி VAAKAI.COM



  1. மனிதர்களது தகுதி அறிய.
    ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
    அவருக்குப் பார்வை கிடையாது.

    அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா , இந்த வழியாக சற்று முன் யாராவது
    சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , " இதற்கு
    முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

    சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது
    இப்பக...்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த
    வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

    மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே,
    வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
    கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

    உடனே துறவி , " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன்
    சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே
    கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

    மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி
    இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும்
    எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

    "அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார்,
    அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

    முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர்
    பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்."
    என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

விவேகம் VAAKAI.COM


  1. முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள்
    தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது தமது
    காதில் ஓணான் புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார். மறுநாள்
    அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவ்வாறே சொன்னார்.

    முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!"
    என்று வருத்ததோடு கூறிவிட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.
    ...
    இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!"
    என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

    மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர்
    ஆணித்தரமாக. "முனிவர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான். அதுவரை
    வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளிப்பட்டார்.

    "எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.

    "அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின்
    முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது
    என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.
    விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்
    முனிவர்.

    எனவே வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்.

நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் VAAKAI.COM


  1. ஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து கும்மிருட்டு ஆனது. சரி. ஏதாவது ஒரு மரத்தில் ஏறி ...இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்தது. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. காரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடிப்போ படிகளோ எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எப்போதோ இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்பட்ட வெகு ஆழமான பள்ளம்போல் இருந்தது அது. சேறும் சகதியும் நிறைந்திருந்த அதில் இருந்து வெளியேறுவது எதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் முடியும்.

    நிலவரம் என்ன என்பது தெரிந்ததுமே இளைஞர்களில் ஒருவன் கலவரம் அடைந்து சேர்ந்து போனான் மற்றவனோ சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். பிறகு யோசிக்க ஆரம்பித்தான். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கியவன் அதன் அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான். அந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு கழி போல் இரு துண்டுகளை வெட்டி எடுத்தான். இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம்... வா.. ! என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை ஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து கும்மிருட்டு ஆனது. சரி. ஏதாவது ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்தது. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. காரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடிப்போ படிகளோ எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எப்போதோ இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்பட்ட வெகு ஆழமான பள்ளம்போல் இருந்தது அது. சேறும் சகதியும் நிறைந்திருந்த அதில் இருந்து வெளியேறுவது எதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் முடியும்.

    நிலவரம் என்ன என்பது தெரிந்ததுமே இளைஞர்களில் ஒருவன் கலவரம் அடைந்து சேர்ந்து போனான் மற்றவனோ சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். பிறகு யோசிக்க ஆரம்பித்தான். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கியவன் அதன் அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான். அந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு கழி போல் இரு துண்டுகளை வெட்டி எடுத்தான். இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம்... வா.. ! என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது. என்ன செய்து ? மறுபடியும் யோசித்தான் இளைஞன். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன் நண்பனிடம் நண்பா எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் நமக்கு வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றான். அதைக் கேட்டதுமே இரண்டாவது இளைஞன் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக கேட்டான், என்ன மந்திரம் அது, சொல்...! இளைஞன் சொன்னான் நமஇவெயா

    நமசிவாய தெரியும்.. இது என்ன நமஇவெயா... ? உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா ? இருக்கிறது.. ! அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் ...! இரண்டாவது இளைஞன் மந்திரத்தைச் சொன்னான். அவன் மனதிலும் நம்பிக்கை எட்டிப் பார்த்தது. அப்புறும் என்ன, இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். கொஞ்சநேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. வழியில் இரண்டாவது இளைஞன். நண்பனிடம் கேட்டான். எனக்குத் தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய் ? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவது தெரியுமா உனக்கு ? அவற்றையும் சொல்லித்தருகிறாயா? முதல் இளைஞன் சிரித்தான்.. நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு செல்லித் தந்தது. மந்திர வார்த்தையும் அல்ல.. ! அப்படியானால் என்னை ஏன் ஏமாற்றினாய் ? நான் ஏமாற்றவில்லை. உன் மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை வெளியே தள்ளி, நீ நம்பிக்கையுடன் செயல்பட உதவினேன். அவ்வளவுதான். நீ சொன்ன மந்திர வார்த்தை..! ? அது, நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் என்ற வார்த்தையின் முதல் எழுத்துக்கள்தான். புரிந்ததா?