1. நாள்தோறும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. இனிப்பு வகைகளைக் குறைத்து, வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
3. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
4. குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
5. வாரந்தோறும் சத்துள்ள ஒரு புதிய உணவைச் சமைக்கலாம்.
6. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும்.
7. வறுத்த உணவுகளைத் தவிர்த்து, வேக வைத்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
8. முளைவிட்ட தானிய உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம்.
9. காய்கனிகள், பழ வகைகள் அன்றாட உணவில் அவசியம் இடம் பெற வேண்டும்.