Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

நார்த்தங்காய்

·  வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌யநறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம்.
·  இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரது‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.
·  நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌மவ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.
·  நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌லஉடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.
·  நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌மத‌ணி‌க்கு‌ம்.
·  நார‌த்த‌ங்கா‌ய் இலைகைள நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
·  இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல்ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம்.
·  பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.
·  சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
·  வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒருஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ண்ணா‌ல் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

உடல் பருமனை குடமிளகாய் குறைக்கும்

உலகம் முழுவதும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடமிளகாயில் உள்ள ஒரு பொருள் உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர் ஜாங் ஒன் யுன் தலைமையிலான குழுவினர், உடல் பருமனை குறைப்பதில் குடமிளகாயின் பங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுடன் குடமிளகாய் கலந்த உணவை கொடுத்து வந்தனர். மற்றொரு பிரிவுக்கு அதே கொழுப்புச் சத்து உணவை மட்டும் கொடுத்தனர்.
குறிப்பிட்ட நாட்கள் கழித்து எலிகளின் உடல் பருமனை சோதனையிட்டனர். குடமிளகாய் கலந்த உணவு சாப்பிட்ட எலிகளின் எடை அதை சாப்பிடாத எலிகளைவிட 8 சதவீதம் வரை குறைந்திருந்தது. மேலும், கொழுப்புச் சத்தின் அளவு கட்டுப்பட்டிருந்தது. குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள், கொழுப்பை குறைக்கிறது. உடல் பருமனிலிருந்து விடுபட உதவுகிறது. பருமனை குறைக்க மருந்து தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும் என ஜாங் தெரிவித்தார்.

வாழையின் பயன்கள்!

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு `பிவைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?
தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.
புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து
, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.
பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.
இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

ஆரோக்கிய டிப்ஸ் – 9

* உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாததே மூலக்காரணம்.
* வாயு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், அதிகமான நீர் அருந்த வேண்டும்.
* உடற்பயிற்சி அவசியம். மல்லாந்து படுத்துக்கொண்டு, இரு கால்களையும் நன்றாக உயர்த்த வேண்டும். முட்டி மடியக்கூடாது. நீட்டிய காலை மெதுவாக உயர்த்தி கீழே இறக்க வேண்டும். இதனால் வயிற்று தசைகளால் மலம் தள்ளப்பட்டு வெளியேற்றப்படும்.
*இரைப்பையில் உள்ள அமிலநீர், உணவு குழாயில் அழற்சி, புண் ஏற்படுத்துவதால் உணவு விழுங்குவதில் தடங்கல் ஏற்படுகிறது.
* இதை தவிர்க்க உணவு கட்டுப்பாடு அவசியம்.
* காபி, சாக்லேட், கூல்டிரிங்ஸ், புகையிலை தவிர்க்க வேண்டும்.
* உடல் எடையை குறைக்க வேண்டும்.
* இரவு உறங்கும்போது, தலைபக்கம் உயர்வாக இருக்கும் வகையில் படுத்தால், அமில எதிர்ப்பு குறையும்.
* இவை அனைத்தையும் மீறி, விழுங்குதலில் சிக்கல் தொடர்ந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

காக்க..காக்க…

கண்களின் வார்த்தைகள் புரியாதாஎன்ற திரைப்பட பாடலின் கூற்றுப்படி பெண்களின் உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக கண்கள் உள்ளன. அந்தக் கண்களில் உண்டாகின்ற சிறு பிரச்னைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகிற்கும் நல்லதல்ல.
கண்களை சுற்றியுள்ள சருமம் மிக, மிக மென்மையானது. சீக்கிரமே வறண்டு விடக் கூடியது. பெண்கள் அதிகம் கவலைப்படுவது கண்களைச் சுற்றி ஏற்படும் சுருக்கங்கள்.
25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி ஏற்படும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சம் ஐ-கிரீம் அல்லது எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம். கண்களுக்கு மசாஜ் செய்யும்போது புருவங்களில் ரோம வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம்அல்லது பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம். கண்களில் எரிச்சலோ, அரிப்போ இருந்தால் கைகளால் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உருவாக சுலபமான காரணமாகி விடும்.
பெண்களை வாட்டும் அடுத்த பிரச்னை கரு வளையம். பரம்பரைவாகு, தூக்கமின்மை, கம்ப்யூட்டர், டிவி முன்பு அதிக நேரம் இருப்பது, சரிவிகித உணவு இன்மை ஆகியவை கண்களில் கரு வளையம் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இதற்கு முதல் சிகிச்சை எட்டு மணி நேரத் தூக்கம். கருவளையம் அதிகமிருந்தால் அழகு நிலையங்களில் செய்யப்படும் ஐ மசாஜ் பலனளிக்கும். ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை மேற்கொண்டால் கருவளையம் மறைந்து விடும்.
அழகுக்காக கண்களில் போடும் மேக்கப்பை இரவு படுப்பதற்கு முன்பு முற்றிலும் அகற்றி விட வேண்டும். செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை கண்டிப்பாக அகற்றி விட வேண்டும். அதன்பின், சுத்தமான தண்ணீரில் பஞ்சை நனைத்து கண்களை மெதுவாகத் துடைக்க வேண்டும்.
அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் தரமான லென்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.
மேக்கப் போடுவதற்கு முன்பாக கான்டான்ஸ் அணிவதும், இரவில் மேக்கப்பை அகற்றுவதற்கு முன் நீக்குவதும் நல்லது. இதன்மூலம், கண்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள் அடிக்கடி கண்களை மூடி சில நொடிகளாவது ஓய்வு தர வேண்டும்.
கண்களைப் பாதுகாக்கும் இமைப் புருவம், நமது கண்களுக்கு வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெறுகிறது. எனவே, வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
கண்களை சுற்றியுள்ள தோலில் சாதாரண கிரீம்களை பயன்படுத்தாமல் அதற்கான சிறப்பு கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் முன்பு சன்ஸ்கிரீன், தரமான சன் கிளாஸ் அணிவது நல்லது.
கண்களின் ஆரோக்கியத்தைப் பேண சுத்தமான தண்ணீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். சாதாரண மையில் ஆரம்பித்து ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்கரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும்விட இரவில் சீக்கிரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

பெண்களுக்கு 10 கட்டளைகள்

1. நாள்தோறும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. இனிப்பு வகைகளைக் குறைத்து, வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
3. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
4. குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
5. வாரந்தோறும் சத்துள்ள ஒரு புதிய உணவைச் சமைக்கலாம்.
6. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும்.
7. வறுத்த உணவுகளைத் தவிர்த்து, வேக வைத்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
8. முளைவிட்ட தானிய உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம்.
9. காய்கனிகள், பழ வகைகள் அன்றாட உணவில் அவசியம் இடம் பெற வேண்டும்.

இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள்

இந்திய மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்கள், வயது வித்தியாசம் இன்றி, இரும்புச் சத்து குறைபாட்டினால் அனீமியா என்ற ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில், ஹீமோகுளோபின் (எச்.பி.,) அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 10 கிராம் தான் உள்ளது. இதை 10 ஜி/டி.எல்., என்ற அளவில் குறிக்கிறோம். உடலில் ஹீமோகுளோபின் அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 11 முதல் 15 கிராம் வரை இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இந்த குறைபாடு, வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இல்லை. மற்ற நோய்கள் ஏற்படும் போது கடும் காய்ச்சலோ, கட்டியோ உருவாகும். ஆனால், ரத்தசோகை நோய் உடனடியாக ஏற்படாது. மெதுவாக ஏற்பட்டு, மெதுவாகவே அதிகரிக்கும். இந்த நேரத்தில் வரும் என்றும் கூற முடியாது. எனவே, இந்நோயைக் கண்டறிவது கடினம். கண்டறிவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட நபர் கடுமையான நோயாளியாகி விடுவார். இதற்கான அறிகுறிகளாக, சோர்வு, அசதி, தலைவலி, தலை லேசாகிப் போதல், மூச்சிறைத்தல், கால், கை சில்லிட்டுப் போதல், நகங்கள் வலுவிழத்தல், நா வறட்சி ஆகியவை ஏற்படும். கால்கள் ஆடிக் கொண்டே இருக்கும்; இதனால் இரவுத் தூக்கத்தில் திடீர் விழிப்பு நிலை ஏற்படும். பசி எடுக்காது. சத்தான உணவு சாப்பிடத் தோன்றாது. ஐஸ் கட்டி, சமைக்கப்படாத அரிசி, புழுதி, சாக்பீஸ், கரிக் கட்டை, பெயின்ட், விபூதி, குங்குமம் ஆகியவற்றை சாப்பிடத் தோன்றும்.
இரும்புச் சத்து குறைபாடு கொண்ட
ரத்தசோகை ஆபத்தானது. ஏனெனில், ஹீமோகுளோபின் உருவாக இரும்புச் சத்து மிக அவசியம். ரத்தத்தின் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் காணப்படும். இதன் முக்கிய பணியே, உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்து செல்வது தான். ஹீமோகுளோபின் குறைந்தால், சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கும்.
ஆண்
, பெண் இருவருக்குமே, உடலில் இரும்புச் சத்து குறைந்தபடியே இருக்கும். இறந்த செல்கள் உதிரும் போது, கழிவுகள் வெளியேறும் போது, தினமும் ஒரு மி.லி., கிராம் அளவு, இரும்புச் சத்தும் வெளியேறி விடும். மகப்பேறு தகுதி கொண்ட அனைத்து பெண்களுமே, மாதவிடாய் காலங்களில் தினமும், கூடுதலாக ஒரு மி.லி., கிராம் அளவும், மகப்பேறு காலத்தில் 500 மி.லி., கிராம் அளவும் இரும்புச் சத்தை இழக்கின்றனர். எனவே, ஆண்களை விட பெண்கள் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் போது உடல் சோர்வு
, வீடு மற்றும் அலுவலகப் பணிகளை சுறுசுறுப்பாய் செய்ய முடியாமல் போதல் ஆகியவை ஏற்படும். மகப்பேறு தகுதி உடைய பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், ரத்தசோகை உள்ள குழந்தை பிறத்தல் ஆகியவை ஏற்படலாம். கடும் ரத்தசோகை ஏற்படின், தாய் உயிருக்கே உலை வைத்து விடும். குழந்தைகள், தாயிடமிருந்தே இரும்புச் சத்தை வாங்கிக் கொள்கின்றன. பிறந்து ஆறு மாதம் வரை, தாயிடமிருந்து பெறப்பட்ட இரும்புச் சத்தே, குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும். அதன் பிறகு, இரும்புச் சத்து டானிக் கொடுக்கத் துவங்க வேண்டும். குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குழந்தையின் அறிவுத் திறன் 5 முதல் 10 பாயின்ட் வரை குறையும். மொழி கற்றுக் கொள்வதில் சிரமம் உண்டாகும். உடல் வளர்ச்சியும் குன்றும். சோர்வு, தாமத செயல்பாடு, உணவு சாப்பிடத் தோன்றாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தொடர் தொற்று ஏற்படுதல் ஆகியவை உண்டாகும்.
விடலைப் பருவத்தை அடைந்த பெண்கள்
, அதிகளவில் ரத்தசோகையால் பீடிக்கப்படுகின்றனர். மாதவிடாய் ஏற்படத் துவங்கும் காலமான இந்த நேரத்தில், திடீர் சோர்வு ஏற்படுவதால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். கவனம், நினைவுத் திறன் குறையும். நல்ல முறையில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதனால், பல பெண்களுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காத நிலை ஏற்படும்.
இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது
, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப் புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில் சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியாவில் தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது. இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேர்கிறது. வயிற்றில் புழு தோன்றுவதைத் தவிர்க்க அனுபவ ரீதியான மருத்துவம் தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. அல்பெண்டிசால் மருந்து சாப்பிடுவது அல்லது மூன்று நாட்களுக்கு, இரண்டு வேளை மெபெண்டசால் மருந்து சாப்பிடுவது என்ற நிலை உள்ளது.
சரியான முறையில்
, சரியான அளவு மருந்து சாப்பிடவில்லை எனில், வயிற்றில் எல்லா புழுக்களும் அழியாமல், சதை வழியே மற்ற பாகங்களுக்குப் பரவும் நிலை ஏற்படும்.
கீரைப் புழு ஒருவரிடம் இருந்தால்
, வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வந்து விடும். இதனால், இந்தப் புழுவை அழிக்க, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்குப் பின், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளராமல் இருக்க

* சமையல் செய்வதற்கு முன், கையை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், ஒவ்வொரு முறை சிறுநீர், மலம் சென்ற பின்னும், கையை மிகச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* கையில் நகங்கள் வளர்ந்தால், இடுக்குகள் இல்லாமல், சீராக கத்தரிக்கப்பட வேண்டும்.
* பச்சைப் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நன்கு சமைக்கப்படாத காய்கறிகளை சாப்பிடக் கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்கு முன், நன்றாகக் கழுவ வேண்டும்.
* படுக்கை விரிப்புகளை, வாரத்திற்கு இரு முறை மாற்ற வேண்டும். துவைத்த விரிப்புகளை, வெயில் படும்படி உலர்த்த வேண்டும்.
ரத்தசோகை ஏற்படாமல் இருக்க
, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
நாள் ஒன்றுக்கு
, 10 முதல் 15 மி.லி., கிராம் வரை இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி, இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
சைவம் சாப்பிடுபவர்கள்
, சோயா, கோதுமை, ஓட்ஸ், உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
காய்கறிகளில் உள்ள சில ரசாயனங்கள்
, அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தடை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட, காய்கறியில் கிடைக்கும் சத்து குறைவானதே. எனவே, காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
குழந்தைகளும்
, பெண்களும் இரும்பு ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உணவுடன் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். தினமும் ஒரு மாத்திரை என சாப்பிடத் துவங்கலாம். எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடன் சாப்பிடலாம். அமிலம் கலந்த சாறு, இரும்புச் சத்து உடலில் நன்கு உறிஞ்சிக் கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டால், கூடவே வாழைப்பழமோ, கொய்யா பழமோ சாப்பிடலாம். இரும்புச் சத்து மாத்திரையுடன், கால்சியமோ, துத்தநாகச் சத்து நிறைந்த மாத்திரையோ சாப்பிடக் கூடாது.
அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் பாலிக் ஆசிட்
அடங்கிய சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இப்படி கொடுப்பதில்லை. பெற்றோராகிய நாம் தான், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

கால்சியமும் முக்கியத்துவமும்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள்வதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கால்சியம் தேவை.
கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம்பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல்நலத்துக்கு அவசியமானது.
கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு பலவேலைகளையும் செய்கிறது. இடைவிடாது வேலை செய்துக் கொண்டிருக்கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கும் கால்சியம் உதவி செய்கிறது.
மேலும், நரம்புகளுக்கும், இரத்தத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்றால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.
வளரும் குழந்தைகளின் உடம்பில் போதுமான கால்சியம் இல்லையென்றால் எலும்புகள் மென்மையடைந்து வளர்ச்சி குன்றிவிடும். இதய நோயும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருத்தரித்த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்களும் கால்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:
பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.
தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்ந்துள்ளது. அதன் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கால்சியம் சேர்கிறது.
கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றிலும் ஓரளவிற்கு கால்சியம் இருக்கிறது.

தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகள்

ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது. ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது.
இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தடையற்ற, ஆழ்ந்த உறக்கமே நல்ல உடல் நிலையை உறுதி செய்யக் கூடியது என்று கூறும் அவர்கள், தூக்கமின்மையால் ஏற்படும்கோளாறுகளையும் பட்டியலிடுகின்றனர்.
இரவு சாப்பிட்ட உணவுச் செரியாமை, குறட்டை விடும் நிலை உருவாதல், கால்களுக்கு ஓய்வின்மையால் மறுநாள் நிலவும் உடல் அசதி, பகல் நேரத்தில் உறக்கம் தோய்ந்த முகம், கோவப்படுதல், நினைவு சக்தி குறைதல் ஆகியன மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.
அதுவும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
8 மணி நேர ஆழந்த உறக்கம் வெற்றிக்கான முக்கியத் தேவை, ஏனெனில் அதுவே நமது உடல், மனத் திறமைகளை அதிகரிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கூறுகின்றனர்.
தூங்குவது எப்படி?
இரவில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை மருத்துவம் மட்டுமல்ல, ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இரவு உணவுப் பிறகு உடனடியாக படுக்கைக்குச் செல்லாமல், வீட்டின் முற்றத்திலோ அல்லது (ஆபத்தற்ற) தெருவிலோ சிறிது நேரம் உலவி விட்டு பிறகு வந்து படுத்துறங்க வேண்டும் என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.
தூங்குவதற்கு முன் நம் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல், ‘இதற்கு மேல் என் உடலின் ஓய்விற்கான நேரம் இதுஎன்று கூறிவிட்டு, மனதை அமைதிப்படுத்திவிட்டு படுக்கையில் சாய வேண்டும் என்கிறார் அன்னை. ஸ்ரீ அரவிந்தரோடு ஆன்மீக முயற்சி மேற்கொண்ட அன்னை, இரண்டு கால்களையும் நன்குநீட்டிக்கொண்டு, மல்லாந்து படுத்து, சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தியப் பிறகு கண்ணயர வேண்டும் என்றும், இதனை பழக்கப்படுத்தினால் அதுவே நல்லுறக்கத்தை தருமென்றும் கூறுகிறார்.
சித்த வைத்திய நிபுணர்கள், இரவு உணவிற்குப் பிறகு குறைந்து இரண்டு மைல் தூரமாவது நடந்துவிட்டு வந்து படுத்தால் உடல் நலம் கூடும் என்று கூறுகின்றனர். மதிய நேரத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்குவதை நல்லது என்று கூறும் சித்த வைத்தியர்கள், ஒரு நாள் இரவு முழுமையாக கண் விழித்தாலோ அல்லது பணியில் ஈடுபட்டாலோ அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு சரியாவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர். எனவே இரவு தூக்கத்தை தவிர்ப்பது உடல் நலத்தின் மீது நாம் காட்டும் அக்கறையாகும்.
குறிப்பாக வீட்டில் இருக்கும்போது இரவு நேரத்தில் கணினிப் பணிகளை செய்வதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ உடலிற்கும் மனதிற்கும் பெரும் தீங்கிழைக்கக் கூடியது என்கின்றனர்.
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமேபோன்ற இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவதும் நன்றே.

பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்க கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.
* வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, <உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
* ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து உபயோகிப்பது முதுகு வலி, முட்டி வலி போன்ற பிரச்னைகளைக் கொடுக்கும். வாரத்தில் இரண்டு நாட்களாவது கோலாப்பூரி செருப்புகள் போன்ற தட்டையான அடிப்பாகத்தை கொண்ட செருப்புகளை உபயோகிப்பது கால்கள் மூச்சுவிடுவதற்கு வழிவகுக்கும்.
* தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும்.
புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.
* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.