பல்லி ஒன்று பெரிய கட்டெறும்பைப் பிடித்து அது நழுவிப் போய் விடாதபடி ஒரே கவனத்தில் இருந்தது.அப்போது வேறொரு சிற்றெறும்பு பல்லியின் அருகில் மிக நெருக்கமாக வந்தது.பல்லி என்ன செய்கிறது என்று பார்த்தேன். அந்த சிற்றெறும்பைப் பல்லி கவனிக்கவே இல்லை.பிடிபட்ட பெரிய எறும்பு தப்பி விடக் கூடாது என்பதில் கவனம் இருந்ததால் பக்கத்தில் வந்த சிறிய எறும்பு அதன் பார்வையில் படவில்லை.கவனம் ஒன்றில் தீவிரமாக இருக்குமானால் இன்னொன்றில் எண்ணம் ஈடுபாடு கொள்ளாது.சிந்தனையில் மனம் தீவிரமாக இருக்கும்போது நெருக்கத்தில் இருப்பது கூட நேத்திரத்திற்குப் புலப்படாது.
**********
உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?
பொறுமை -சோம்பல்
சுறுசுறுப்பு -அவசரம்
நிதானம் -மந்தம்
சிக்கனம் -கஞ்சம்
வள்ளல்தனம் -ஊதாரித்தனம்
உறுதி -பிடிவாதம்
வீரம் -முரட்டுத்தனம்
பணிவு -கோழைத்தனம்
முன்ஜாக்கிரதை -தயக்கம்
இணக்கம் -ஏமாளித்தனம்
இவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றிதான்.
**********
உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?
பொறுமை -சோம்பல்
சுறுசுறுப்பு -அவசரம்
நிதானம் -மந்தம்
சிக்கனம் -கஞ்சம்
வள்ளல்தனம் -ஊதாரித்தனம்
உறுதி -பிடிவாதம்
வீரம் -முரட்டுத்தனம்
பணிவு -கோழைத்தனம்
முன்ஜாக்கிரதை -தயக்கம்
இணக்கம் -ஏமாளித்தனம்
இவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றிதான்.