சமுதாயத்தில் உயர் நிலையில் இருந்த ஒருவரிடம் அவர் உயர்வுக்கு கரணம் சொல்ல முடியுமா என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர் தன தாய் தான் காரணம் என்று சொல்லிவிட்டு சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை சொன்னார்.
அவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் பிரிட்ஜிலிருந்து பால் இருந்த ஒரு பாட்டிலை எடுக்க முயற்சித்தபோது பாட்டில் கீழே நழுவி பால் முழுவதும் கொட்டி விட்டது.தாயார் வந்து அதைப் பார்த்தவுடன் குழந்தை பயத்துடன்,''அம்மா,பால் கொட்டி வீணாகி விட்டது''.அதற்கு அந்த அன்னை சொன்னார்,''நான் பாலை விட உன்னை நேசிக்கிறேன்.எனக்கு நீதான் முக்கியம்.''என்று கூறிவிட்டுப் பின் சொன்னார்,,''மிக அழகாகக் கொட்டியிருக்கிறாயே!பரவாயில்லை கீழே கொட்டிவிட்டது இனி ஒன்றும் அதை செய்ய முடியாது.நீ கொஞ்ச நேரம் அதிலே விளையாடு.''என்றார்.குழந்தையும் அதன் மேல் விழுந்து புரண்டு குதூகலத்துடன் விளையாடியது.திரும்ப வந்த தாய்,''விளையாடி விட்டாயா?இந்த இடம் இப்போது அசிங்கமாக உள்ளது.இப்போது இந்த இடத்தை சரி செய்ய வேண்டும்.நீ எது கொண்டு இதைத் துடைக்கப் போகிறாய் ?துணி தரட்டுமா,ஸ்பான்ச் தரட்டுமா?''அவன் ஸ்பான்ச் கேட்டு வாங்கித் துடைக்க ஆரம்பித்தான்.தாயும் அவனுக்கு கூட உதவி செய்தார்.
பின் அவனிடம் சொன்னார்,''இப்போது பாட்டில் ஏன் கீழே விழுந்தது என்று பார்க்க வேண்டும்?நீ எப்படிபாட்டிலைத் தூக்கினாய்?''என்று கேட்க அவன் செய்து காண்பித்தான்.உடனே அத்தாய் அதே போல ஒரு காலி பாட்டிலை எடுத்துக் கொண்டு அவனுடன் வீட்டின் பின்புறம் சென்று அந்த பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதை எப்படித்தூக்கினால் கீழே விழாமல் செய்ய முடியும் என்பதை விளக்கிக் காட்டினார்.பையனும் ஒரு பாடத்தை அழகாகக் கற்றுக் கொண்டான்.
இப்படி பொறுமையுடன் குழந்தைகளை வளர்த்தால் நிச்சயம் சமுதாயத்தில் அவர்கள் உயர்ந்தவர்களாக வருவார்கள்.