விட்டல்

மகாராஷ்ட்ராவில் பகவான் கிருஷ்ணனின் பெயர் விட்டல்.விட்டல் என்றால் 'சும்மா உட்கார்'என்று பொருள்.அந்தப் பெயர் வந்த கதை:
ஒரு கிருஷ்ண பக்தரின் தாயார் இறக்கும் தருவாயில் இருந்தார்.அந்த பக்தர்
தாயின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தார்.கிருஷ்ணர்,தன் பக்தன்  இப்படி உண்ணாமல் உறங்காமல் தாய்க்குப் பணிவிடை செய்வதைப் பார்த்து அவனுக்கு உதவி செய்ய எண்ணி ,அவன் பின்னால் வந்து நின்றார். அவருடைய  காலடி ஓசை கேட்டு பக்தன் திரும்பவில்லை.தன் கவனம் முழுவதையும் தாயாரின் பணிவிடையிலேயே செலுத்தியதால் யார் வந்திருக்கிறார்கள் என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.பின் கிருஷ்ணர், ''நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்,''என்றார்.''என் தாய்க்குப் பணிவிடை செய்ய என்னாலேயே முடியும்,''என்றார் பக்தன்.இப்போதும் அவர் திரும்பி கிருஷ்ணனைப் பார்க்கவில்லை.ஆனால் தன் அருகில் இருந்த கல்லை எடுத்துப் பின்னால் தள்ளி,''என் வேலை முடியும் வரை, தயவுசெய்து, அந்தக் கல்லில் அமரவும்.''என்று அவரைப் பார்க்காமலே சொன்னார்.இவ்வாறு பக்தர் சொன்னதன் பேரில் கிருஷ்ணரும் அதில் அமர்ந்திருந்ததால் அவருக்கு  விட்டல் என்ற பெயர் ஏற்பட்டது.
பக்தனின் ஈடுபாடு ஒரு தியானம் என்றால் கடவுளே அதற்கு இடையூறாக இருக்க முடியாது.