நாயும் துறவியும்

நாய்களின் சில குணங்கள் துறவிகளின் குணங்களை ஒத்திருக்கிறது:
நாய்கள் எப்போதும் பசித்திருக்கும்.

நாய்கள் எப்போதும் விழித்திருக்கும்.(சிறிது நேரம்தான் தூங்கும்.)

அதற்கென தனி இடம் கிடையாது.

இறந்தால் அதற்கென்று ஒன்றும் கிடையாது.

எஜமான் அடித்தாலும் அவரை விட்டு விலகாது.

பூமியில் தாழ்ந்த இடத்தில்தான் இருக்கும்.

இன்னொருவர்
அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டால் வேறு இடம் பார்த்துக் கொள்ளும்.
கடுமையாய் விரட்டினாலும்
,பகைமை  பாராட்டாது,நட்புடன் வாலாட்டி வரும்.
ஒரு இடத்தை விட்டுக் கிளம்பினால் அந்த இடத்தைத் திரும்பிப் பார்க்காது.

    இவ்வளவு அருமையான குணங்கள்  உள்ள நாயை நாம்,''அடச்சீ நாயே!'' என்று ஏளனம் செய்கிறோம்.