டாக்டர் வீட்டின் கதவை ஒருவர் தட்டினார்.ஒரு ஆறு வயது சிறுமி கதவைத் திறந்தாள்.பார்த்தாலே அவள் டாக்டரின் பெண் என்பது தெரிந்தது.''டாக்டர் வீட்டில் இருக்கிறாரா?''என்று வந்தவர் கேட்டார். சிறுமியும், ''இல்லை, அய்யா,அவர் ஒரு அப்பெண்டிசிடிஸ் ஆப்பரேசன் செய்ய ஒரு மருத்துவ மனைக்கு போயிருக்கிறார்.'' என்றாள்.வந்தவருக்கு ஆச்சரியம்.அவர் கேட்டார்,''ஒரு சிறுமிக்கு இந்த மாதிரி கடினமான வார்த்தைகள் சொல்வது மிகக் கடினம் ஆயிற்றே.நீ மிகவும் சரியாக உச்சரிக்கிறாயே!அது சரி,உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்?''அந்த சிறுமி தலையை வேகமாக ஆட்டி,''ஓ,எனக்கு அது பற்றி நன்றாகத் தெரியுமே! அதற்கு இருபதாயிரம் ரூபாய் செலவாகும்.அனிஸ்தீசியாவுக்குத் தனி யாக பீஸ் வசூலிப்பார்கள்.''