அறுவை திலகம்

''என்ன அவருக்கு தலையில் நிறைய காயம்?''
முடி
கொட்டிடுச்சி.
******
சாம்பார் தங்கமாக மாற என்ன செய்ய வேண்டும்
?
''24காரட் போட வேண்டும்.''
******
மணி இரண்டாகுது..இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.

''எதுக்கு?''
மூன்று மணி ஆகத்தான்..

******
தொப்பை விழாம இருக்க என்ன செய்யணும்
?
''விழாம பிடிச்சிக்கனும்.''
******
காவிரி ஆறு எதில் ஆரம்பிக்கிறது
?
''ஏன்,'கா'வில்தான்.''
******
ஔவையார் ஹோட்டலுக்குப் போனால் சர்வர் அவரிடம் என்ன கேட்பார்
?
''ஒளவையே!சுட்ட இட்லி வேணுமா,சுடாத இட்லி வேணுமா?''
******
ஒருவனிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அவன் முதல் மாட்டிற்கு பத்து மணிக்கும்
  இரண்டாவது மாட்டுக்கு பன்னிரண்டு மணிக்கும் தீனி போட்டான்.எந்த மாடு முன்னால் சாணி போடும்?
''எந்த மாடும் முன்னால் சாணி போடாது;பின்னால் தான் போடும்.''
******
ஐநூறு
ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்?
''அழுது கொண்டிருந்தால் நோட்டு நனைந்து விடுமே!'' 

******

மேஜை ஆணா,பெண்ணா என்று எப்படி கண்டு பிடிப்பது?

டிராயர் இருந்தால் ஆண்;இல்லாவிட்டால் பெண்.

******

அந்த ஆள் முழிக்கிறது கூட மரியாதையாய் செய்வாரா?அது எப்படி?

'திரு,திரு,'ன்னு தான் முழிப்பார்.

******

ஒரு திருடன் வங்கியில் திருடப் போனான்.சப்தம் கேட்டு ஆட்கள் வந்து விரட்டிச் சென்றார்கள்.சிறிது தூரம் சென்று பார்த்தால் அவன் குளித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவன் உடலில் ஒரு காயமும் இல்லை.அது எப்படி?
 அவன் திருடப் போனது இரத்த வங்கி.
******