“சி’ வைட்டமின் மிகுதியாக உள்ள கனி நெல்லிக்கனி. ஐந்துகிலோ ஆரஞ்சுப்பழத்தில் உள்ள “சி’வைட்டமின் அளவு ஒரு கிலோ நெல்லிக்கனியில் இருக்கும். உடல் அணுக்களைப் பாதுகாப்பதில் இந்தக் கனி மிகச் சிறந்த காரணியாக விளங்குகின்றது.
இதனை பச்சையாக உண்பதால், ஈறுகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் எளிதில் நீங்கி விடும். உடலில் உண்டாகும் அதிக சூட்டைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்கும் ஓர் அரிய மருந்து. மேலும் கர்ப்பப்பை கோளாறுகளையும் இது போக்குகிறது.