நான் உன்னைபிரிந்தாலும் என்னுயிர் பிரியவில்லை !

தொலைக்காமல் தொலைத்த உன்னை
தூரம்
பார்க்கையிலே
என்னை பார்த்தும்
பார்க்காமல் போகிறாய்
உந்தன் நெஞ்சில் ஈரம் இல்லையடி

எந்தன்நெஞ்சில் காயம் உள்ளதடி !


உன்இன்ப
பார்வையில் நனைந்தே பழக்கப்பட்ட
என்இதயம் -உன்

இரும்புபார்வையிலே இளைத்து போனதடி

உன்பார்வையே என்இதயத்தை துளைத்து

சென்றதடி !



என்னை நீ
பிரிந்து இருக்கிறாய்
என்இதயத்தை பறித்துவைத்திருக்கிறாய்

உன்இதயத்தால்
என்இதயத்தை செதுக்கி வைத்தாய்-ஏன்
என்னைமட்டும் ஒதுக்கி வைத்தாய் !



உன்னிடம் என்உயிரையே

கொடுத்துவிட்டேன் எதற்க்காக

என்னை கொல்கிறாய் - என்உயிர்

போனால் உன்னுயிரும்
போய்விடுமே
மறந்துவிட்டாயே !