- பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுக்கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா? ” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.