முன்னேற்றப்பாதைக VAAKAI.COM

  1. ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபிப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது. யாருடைய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத்துக்கு ஒப்பானவர்கள்.
    முன்னேற்றப்பாதைக்கு..., அகத்தூண்டுதல் ஒரு சதவிகிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .-எடிசன்சுறுசுறுப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதியோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்றமடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.-