- ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது.
மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.
யானைக்குத் தெரியாது தான் பாறை போல பெரியது என்று, அது தான் அதன் பலவீனம்...!
எறும்புக்குத் தெரியாது அது எள்ளளவு சிறியது என்று, அது தான் அதன் பலம்...!!!
எனவே தான் இங்கு, தடைகளை வெல்வது எப்படி? என்று எறும்புக் கதை சொல்லி அறிவுறுத்துகிறோம்
.இல்லேன்னா யானைக் கதை சொல்லி இருப்போம்...!