Showing posts with label தெரியுமா?. Show all posts
Showing posts with label தெரியுமா?. Show all posts

ஒரு புதிர்

உங்கள் முன் 'ஆரஞ்சு ','ஆப்பிள்','ஆரஞ்சும் ஆப்பிளும்' என்று தனித்தனியாக எழுதி ஒட்டப்பட்ட மூன்று பெட்டிகள் இருக்கின்றன.ஆனால் மேலே எழுதியிருப்பதுபோல உள்ளே பழம் இருக்காது அதாவது ஆப்பிள் என்று எழுதியுள்ள பெட்டியில் ஆப்பிள் மட்டும் தனியாக இருக்காது.ஆரஞ்சோ,அப்பிளும் ஆரஞ்சும் கலந்தோதான்  இருக்கும்.நீங்கள் ஏதாவது ஒரு பெட்டியில் கைவிட்டு ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துப் பார்க்கலாம்.அதைக்கொண்டு மூன்று பெட்டிகளிலும் என்ன பழங்கள் இருக்கின்றன என்று சரியாகச் சொல்ல வேண்டும்.எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்?எந்தப் பெட்டிக்குள் இருக்கும் பழத்தை எடுக்க வேண்டும்?

விடை;''ஆரஞ்சும் அப்பிளும்'என்று எழுதப்பட்டுள்ள பெட்டியிலிருந்துதான் ஒரு பழத்தை எடுக்க வேண்டும்.அதில் ஆப்பிளும் ஆரஞ்சும் கலந்து இருக்காது.ஆப்பிளோ ஆரஞ்சோ ஏதோ ஒன்று தனியாகத்தான் இருக்க வேண்டும்.எடுத்த பழம் ஆப்பிளாக இருந்தால் அதில் முழுக்க ஆப்பிள் தான் இருக்க வேண்டும்.'ஆப்பிள் என்று எழுதப்பட்ட பெட்டியில் ஆரஞ்சு இருக்கும்.ஆரஞ்சு என்று எழுதப்பட்ட பெட்டியில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கும்.

நாம் எடுத்த பழம் ஆரஞ்சாக இருந்தால்,ஆரஞ்சு  லேபில் பெட்டியில் ஆப்பிள்;ஆப்பிள் லேபில் பெட்டியில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கும்.

பெரியாறு அணை

1895 ம் ஆண்டு பெரியாறு அணை கட்டப்பட்டது.இது ஒரு 'உலகின் கட்டுமான பொறியியல் அதிசயம்'.இது இரண்டு குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்ட 1200 அடி நீளம் கொண்ட பிரதான அணை.1906-08 ல் கலிங்குகளும் மதகுகளும் அமைத்து அதிக பச்ச  நீர் மட்டம் 152 அடி ஆனது.136 அடி உயரத்தில் நீர் கலிங்கு வழியாக மேற்கு நோக்கி வழிந்தோடும்.இதன் மேல் அமைக்கப்பட்ட 16 அடி உயரம் கொண்ட இரும்பு ஷட்டர்களினால் நீர் தேங்கும் உயரம் 152 அடி வரை வரும்.கேரளா அரசின் ஆட்சேபனையினால்  மொத்தம் உள்ள 13 ஷட்டர்களும் இறக்கப்படாமல் 136 அடிக்கு மேல் வரும் தண்ணீர் வழிந்தோடுகிறது.அணையின் 110 அடி வரை தேங்கும் நீரை அணையின் எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது.எனவே அணையில் வருடத்தில் எல்லா நாட்களும் நீர் தேங்கியிருக்கும்.மலைப்பரப்பில் 1,49,00ஏக்கரில் பெய்யும் மழை நீர் தேக்கத்திற்கு வருகிறது.152 அடி உயரம் நீர் தேங்கும்போது நீர்த்தேக்கத்தின் மொத்தப் பரப்பு  6534 ஏக்கராகும்.அதிக பட்ச நீர் தேங்கும் உயரம் 155அடி.(வெள்ள அளவு அதிகரிக்கும்போது)இது சில மணி நேரங்கள் தான் நீடிக்கும்.அப்போது நீர்த் தேக்கப் பரப்பு 8000ஏக்கராகும்.
136 அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு  11210 மில்லியன்   கன  அடி .
142அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு  12830 மில்லியன்  கன  அடி .
152 அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு 15562 மில்லியன்  கன  அடி .
உபயோகிக்க முடியாத 110 அடி உயரத்தில் அணையின் கொள்ளளவு 5700 மில்லியன்  கன  அடி
ஆக பயனுள்ளது 110 அடிக்கு மேல் உள்ளதே.அதாவது,
136 அடி உயரம்  இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=11210-5700=5510 மி .க  அடிகள் .
142 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=12830-5700-7130 மி .க  அடிகள்
152 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=15562-5700=9862 மி .க .அடிகள் .
தமிழகம் கோருவது  142 அடி.
தற்போது இருப்பது. 136 அடி .
வித்தியாசம்=7130-5510=1620 மி .க  அடிகள்
                      -பொறியாளர் இரா.வெங்கடாசலம் எழுதிய ''முல்லைப் பெரியாறு அணை-வரலாற்று விபரங்களும் இன்றைய விவகாரங்களும் ''என்ற  நூலிலிருந்து.

தியானம் செய்வது எப்படி?

தியானம் செய்வது எப்படி என்று, நீட்டி முழக்காமல் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால்
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.

ஆனால் மனதை வெறுமையாக்குவது எப்படி என்று மறுபடியும் கேட்டால், நீட்டி முழக்குவதைத் தவிர வேறு வழியில்லை.


மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.


நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.


அவை இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.


உண்மையில் மனம் ஒரு கருவி மட்டுமே.


ஆன்மிக குரு ஓஷோ சொல்லுவார் - மனம் நமது கால்களைப் போல் ஒரு உறுப்பு. அதனை எப்போது வேண்டுமோ அப்போது உபயோகப் படுத்த வேண்டும். நாம் எப்போதுமே கால்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை - என்று.


நம்முடைய சுயம் மனதை தாண்டி இருக்கிறது.


நாம் என்கின்ற சுயம் தான் எஜமான். மனம் வெறும் வேலைக்காரன் தான்.


ஆனால் எஜமான் காணாமல் போயிருப்பதால் அல்லது பலம் குன்றியிருப்பதால் வேலைக்காரனின் கொட்டம் அதிகமாகி விட்டது.


வேலைக்காரனின் கொட்டத்தை அடியோடு ஒழிப்பது தான் தியானம்.


எஜமானின் இழந்த கவுரவத்தை, பலத்தை மீட்டுவது தான் தியானம்.


வேலைக்காரனை அதட்டி கொட்டத்தை மட்டுமே அடக்குகிறோம். வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை. நீக்கவும் கூடாது. அவனுடைய உதவி அவசியம் தேவை.


ஆனால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது உதவி செய்தால் போதுமானது. எஜமான் சொல்வதை கேட்டு நடந்தால் போதுமானது.


அப்படியானால் அவனை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.


எஜமான் இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.


மனம் எப்போதும் கூச்சலிட்டுக் கொண்டு பிதற்றிக் கொண்டு திரிவதால் எஜமான் இருப்பதை கவனிப்பதே இல்லை.


எண்ண ஓட்டத்தை படிப்படியாக குறைத்தால் தான் தியானம் நிகழ்கிறது.


தியானத்திற்கு நிறைய வழி முறைகளை பெரியோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர்.


அதில் ஒன்று தான் எண்ணங்களை கவனித்தல்.


எண்ணங்களை கவனிப்பது தான் நம் சுயம் - விழிப்புணர்வு - எஜமான்!


வேலைக்காரனின் சேட்டைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாலே, மெதுவாக அடங்க ஆரம்பிப்பான்.


இவ்வளவு நாள் வேலைக்காரனுடன் சேர்ந்து சுற்றிய பழக்கத்தில் எஜமானுக்கு  அவனை தொடர தோன்றினாலும் விருப்பு வெறுப்பின்றி அவனது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.


நமது சுயம் மனதுடன் சேராமல் தனித்து விலகி நின்று பார்க்க பார்க்க மனம் எண்ண ஓட்டத்தை மெல்ல நிறுத்துகிறது.


நமது விழிப்புணர்வு இன்னும் அதிகமாக அதிகமாக மனம் வெறுமையாகிறது.


அந்த வெற்று மனதில் தான் தியானம் என்னும் அந்த அற்புதம் நிகழ்கிறது!


வெற்று மனதின் சக்தி அபாரமானது.

எளிமையே வலிமை

வாழ்வில் சில எளிய விஷயங்கள் தான் நம் வலிமைக்குக் காரணமாக இருக்கின்றன.அவற்றை அலட்சியப்படுத்துவதாலேயே நமக்குப் பல நோய்கள் வருகின்றன.
நாம் உணவு உண்டபின் செய்யக்கூடாத சில எளிய விஷயங்கள்;
*உணவு உண்ட உடன் சிகரெட் குடிக்கக்கூடாது.உணவு சாப்பிட்டவுடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் குடிப்பதற்கு சமம்.இதனால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
*உணவு உண்டவுடன் பழங்கள் சாப்பிடக்கூடாது.சாப்பிட்டால் வயிறு ஊதும்.எனவே ஓரிரு  மணி நேரம் உணவுக்கு முன்னரோ பின்னரோ சாப்பிடலாம்.
*உடனே தேநீர் அருந்தக்கூடாது.அதில் அமிலம் அதிகம் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன்  சத்துக்கள் இறுகி ஜீரணம் கடினமாகும்.
*சாப்பிடும்போது பெல்ட் அணிந்திருந்தால் முடித்தவுடன் அதைக் கழட்டக் கூடாது .குடல் பிரச்சினைகள் வரும்.
*சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது.குளிக்கும்போது உடல் முழுவதும் அதிக இரத்தம் பாயும்.எனவே வயிற்றுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறையும்.எனவே ஜீரணம் பாதிக்கப்படும்.
*சாப்பிட்டவுடன் நடக்கக் கூடாது சிலர் சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடப்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர்.அது உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதைப் பாதிக்கிறது.
*உணவை உண்டவுடன் தூங்கக்கூடாது.ஜீரணம் ஆவது கடினமாகும் வாயுத் தொல்லைகள் உருவாகும்.

பொருள் விளக்கம்

நாம் உபயோகப்படுத்தும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை.எனவே அதன் பொருள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை உபயோகிக்கிறோம்.உதாரணமாக சில வார்த்தைகள் அதன் பொருளுடன்;வேணுகோபாலன்: வேணு என்றால் மூங்கில்.கோ என்றால் பசு.பாலன் என்றால் சிறுவன்.அதாவது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் ஊதி பசுக்களை கவர்ந்த சிறுவன் என்று பொருள்.தாமோதரன்: தாம்பு என்றால் கயிறு.உதரன் என்றால் வயிற்றைக் கொண்டவன்.அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன். யசோதா கண்ணனைக் கயிறு கொண்டு கட்டிய கதை தெரியுமே!நவநீதம்: நவம் என்றால் புதியது;நீதம் என்றால்  எடுக்கப்பட்டது..  காலையில் பசும்பாலில் உறை குற்றி மாலையிலேயே  தயிரைக் கடைந்து எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.நாராயணன்: நாரம் என்றால் தண்ணீர்.அயனம் என்றால் மிதப்பது.தண்ணீரில் மிதப்பவன்.நாராயணன் பாற்கடலில் பள்ளி கொண்டவர் அல்லவா?அனுமான்: துண்டிக்கப்பட்ட முக வாய் உடையவன்.ஒரு முறை இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்கியதால் முகம் துண்டிக்கப்பட்டது.சரஸ்வதி: சரஸ் என்றால் பொய்கை.வதி என்றால் வசிப்பவள்.மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள்.பாகுபலி: பாகு என்றால் தோள்கள்:உருக்கு போன்ற தோள்கள் படைத்தவன்.காஞ்சி: கா என்றால் பிரம்மா:அஞ்சித என்றால் வழிபட்ட.பிரம்மா வழிபட்ட இடம் என்று பொருள்.

எப்படி வந்தது?

PEN  என்ற ஆங்கிலச்சொல் PENNA என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது.இந்தச் சொல்லுக்கு இறகு என்று பொருள்.
***********
சோழ மன்னர்கள் முதன் முதலாக நிக்கோபார் தீவுக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் ஆடையின்றி இருப்பதைக் கண்டனர்.ஆகவே அவர்கள் வாழும் இடத்தை நக்காவரம் என்று அழைத்தனர்.அதுவே பின்னர் நிக்கோபார் என்று ஆயிற்று.
**********
பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.
**********
போர்ச்சுக்கலில் பூதத்தை COCO என்பர்.லத்தீனில் COCOக்கு மண்டை ஓடு என்று பொருள்.போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் பசிபிக் தீவுகளில் தென்னை மர வகைகளைக் கண்டனர்.அவற்றின் காய்கள் மனிதத் தலை அளவு இருப்பதையும்,அதில் கண்களும் இருப்பதைப் பார்த்ததும் அது பூதம் போல இருப்பதாகக் கருதி COCONUT என்று பெயரிட்டனர்.
**********
GROOM என்ற ஆங்கில வார்த்தைக்கு குதிரைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டும் சிப்பந்தி என்று பொருள்.பின்னால் ,சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களையும் GROOM என அழைத்தனர்.பழங்காலத்தில் ஐரோப்பிய கிராமங்களில் விருந்துகளின்போது புதிதாய்த் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை,கல்யாணப் பெண்  சாப்பிடும் மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து உபசரிக்க வேண்டும்.எனவே கணவனுக்கு BRIDE'S GROOM எனப் பெயர் வந்தது.நாளடைவில் அதுவே BRIDEGROOM என்று ஆகிவிட்டது.
**********
முற்காலத்தில் ஐரோப்பாவில் போரிலோ அல்லது தனிப்பட்ட முறையில் மன்னர்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு நிலம்,வீடு ஆகியவை கொடுக்கப்பட்டன.இப்படி பெறுபவர்களை HUSBAND என அழைத்தனர்.HUS என்றால் வீடு.BANDA என்றால் சொந்தக்காரர்.சமூகத்தில் அவர்களுக்கு தனி மதிப்பு இருந்ததால் அவர்களை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ளப் போட்டி இருந்தது.இப்படி ஆரம்பித்து பின்னர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவன் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் HUSBAND என்று அழைக்கப்பட்டான்.
***********

அறிவீரா?

பகவான் ராமகிருஷ்ண பரம ஹம்சரின் இயற்பெயர் கடாதார் சட்டோபாத்யாயா.விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்.
**********
யானை தன துதிக்கையினால் ஒரு டன் எடையைத் தூக்க முடியும்.இதன் பலத்திற்குக் காரணம் துதிக்கையில் நாற்பதாயிரம் தசைகள் உள்ளன.
**********
சாம்பிராணி தேவதாரு மரத்தின் பாலிலிருந்து செய்யப்படுகிறது.
**********
மராட்டிய வீரர் சிவாஜியை ஆங்கிலேயர்கள் மலை எலி என்று வர்ணித்தனர்.
**********
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
**********
சிலருக்கு பேருந்தில் செல்லும்போது வாந்தி வரும்.ஏன்?நம் காதுகளுக்குள் லேப்ரிந்த் என்ற பகுதி இருக்கிறது.பேருந்து,விமானம் இவற்றில் செல்லும்போது நம்மைச் சுற்றிக் காற்றழுத்தம் மாறுகிறது.அப்படி மாறும்போது லேப்ரிந்தால் அதைத் தாங்க முடிவதில்லை.அது வாந்தியை வரவழைக்கிறது.
**********
தூங்குபவர்கள் தும்ம முடியாது.
**********
க்ரையோஜெனிக்ஸ் என்றால் என்ன?மிகக் குறைந்த வெப்ப நிலையில் பொருள்கள் என்ன மாறுதல் அடைகின்றன:அந்த மிகக் குறைந்த வெப்ப நிலையை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றிய விஞ்ஞானம்.இந்த முறைப்படி ஆவிகளை மிகக் குறைந்த வெப்ப நிலையில் திரவமாக்கி அதை ராக்கெட்டுகளில் உபயோகிக்கிறார்கள்.
**********
உடலில்  ஏற்படும் வலியை டால்ஸ் (DOLS)என்ற UNIT ஆல் குறிப்பிடுகிறார்கள்.பிரசவத்தின்போது ஒரு பெண் 9.5 டால்ஸ் வலியை அனுபவிக்கிறார்.ஒரு மனிதன் அதிக பட்சம் 9.5டால்ஸ் அளவு வலியைத்தான் தாங்க முடியும்.
**********

அறிந்து கொள்வீர்.

விடுதலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்பின் விலை 3.5அணா.21.11.47ல் வெளியிடப்பட்ட இதில்,'ஜெய்ஹிந்த்'என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்டது,1.7.1852ல்.விலை அரை அணா.
******
கண் இமைகள்,வியர்வைத் துளிகள் கண்ணுக்குள் விழாமல் காக்கின்றன.
******
'வைரஸ்'என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் 'விஷம்'என்று பொருள்.
******
துருக்கி நாட்டின் தலை நகரான இஸ்தான்புல்லில்தான் உலகிலேய அதிகமான மசூதிகள் உள்ளன.அவற்றின் எண்ணிக்கை 444.
******

'ஆல்காக்கள்'என்ற சிவப்பு நிற கடல் தாவரம் அதிக அளவில் உள்ளதால்தான் செங்கடல் சிவப்பாகத் தெரிகிறது.

******

நமது பூமி சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகம்.விண்ணிலிருந்து பார்த்தால் பூமி நீல நிறத்தில் தெரியும்.யுரேனஸ் கிரகம் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.

******

செவ்வாய் கிரகத்துக்கு என்று தனியாக ஒரு சந்திரன் உண்டு.அது தினமும் இருமுறை தோன்றும்.அதன் பெயர் டைமோஸ்.

******

இந்தியாவில் முதல் முதலாக பஞ்சாயத்துத் தேர்தல் நடந்த ஆண்டு--1926

******

சிலி நாட்டிலுள்ள கலாமா என்ற இடத்தில் இதுவரை மழை ஒரு துளி கூட விழுந்ததில்லை.உலகிலேயே மிக வறண்ட பகுதி இதுதான்.

******

கி.மு.700 ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட தட்சசீலப் பல்கலைக் கழகம் தான் உலகிலேயே முதலில்  உருவான பல்கலைக் கழகம்.இங்கே பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்தார்கள்.சுமார் அறுபது துறைகள் இதில் இயங்கின.

(******

வணங்குவது எப்படி?

கைகளைக் குவித்து தலைக்கு மேல் உயர்த்தி மும்மூர்த்திகளை வணங்க வேண்டும்.
தலைமேல் கைகளைக் குவித்துப் பிற தெய்வங்களை வணங்க வேண்டும்.

நெற்றிக்கு நேராகக் கைகளைக் கூப்பியபடி அறிவு புகட்டிய ஆசானை வணங்க வேண்டும்.

வாய்க்கு நேராகக் கரங்களைக் கூப்பியவாறு தந்தை, அறவோர், அமைச்சர், அரசர் ஆகியோரை வணங்க வேண்டும். 

குவித்த கைகளை வயிற்றில் வைத்து பெற்ற தாயை வணங்க வேண்டும்.

தாய்.தந்தை,குரு,தெய்வம் ஆகியோரை மட்டுமே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கலாம்.