நாம் உபயோகப்படுத்தும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை.எனவே அதன் பொருள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை உபயோகிக்கிறோம்.உதாரணமாக சில வார்த்தைகள் அதன் பொருளுடன்;வேணுகோபாலன்: வேணு என்றால் மூங்கில்.கோ என்றால் பசு.பாலன் என்றால் சிறுவன்.அதாவது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் ஊதி பசுக்களை கவர்ந்த சிறுவன் என்று பொருள்.தாமோதரன்: தாம்பு என்றால் கயிறு.உதரன் என்றால் வயிற்றைக் கொண்டவன்.அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன். யசோதா கண்ணனைக் கயிறு கொண்டு கட்டிய கதை தெரியுமே!நவநீதம்: நவம் என்றால் புதியது;நீதம் என்றால் எடுக்கப்பட்டது.. காலையில் பசும்பாலில் உறை குற்றி மாலையிலேயே தயிரைக் கடைந்து எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.நாராயணன்: நாரம் என்றால் தண்ணீர்.அயனம் என்றால் மிதப்பது.தண்ணீரில் மிதப்பவன்.நாராயணன் பாற்கடலில் பள்ளி கொண்டவர் அல்லவா?அனுமான்: துண்டிக்கப்பட்ட முக வாய் உடையவன்.ஒரு முறை இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்கியதால் முகம் துண்டிக்கப்பட்டது.சரஸ்வதி: சரஸ் என்றால் பொய்கை.வதி என்றால் வசிப்பவள்.மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள்.பாகுபலி: பாகு என்றால் தோள்கள்:உருக்கு போன்ற தோள்கள் படைத்தவன்.காஞ்சி: கா என்றால் பிரம்மா:அஞ்சித என்றால் வழிபட்ட.பிரம்மா வழிபட்ட இடம் என்று பொருள்.