விடுகதைகள்-2

1.ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை-அது என்ன?
******
2.தங்கை விளக்கு காட்ட,அண்ணன் மத்தளம் கொட்ட,
அம்மா தண்ணீர் தெளிக்க
,அது என்ன?
******
3.அடுக்கடுக்கா இருந்தாலும் ,பிரிச்ச பிறகு
அடுக்க முடியாது-அது என்ன
?
******
4.தாடிக்காரன்,மீசைக்காரன்;
கோவிலுக்குப் போனா வெள்ளைக்காரன்-அது என்ன
?
******
5.சின்ன இடையல்ல ;ஆனாலும்
அன்ன நடை-அது என்ன
?
********
6.இருட்டுப் புதையிலே,இடி விழுந்த பாறையிலே,
நான் வச்ச கட்டுச்சோறு நனையாம இருக்குது-அது என்ன
?
******
7.காடு பெருங்காடு,அடர்ந்த ஒசத்தியான காடு;
அந்தக் காட்டிலே அடக்க ஆளில்லாம

நினைச்சபடி விளையாடறா வீராயி

பெத்த புள்ள-அது என்ன
?
******
8.பச்சை வீட்டிற்கு சிவப்பு வாசல் -அது என்ன?
******
9.சின்னப் பையன்னு சின்னப் பொண்ணு சேர்ந்து கட்டின வீடு;அதைச் சிக்கெடுத்துக் கொடுத்த பேருக்கு
சென்னப்பட்டினம் தாரேன்-அது என்ன
?
******
10.அன்னு கூடி அன்னு
 அழியும் பட்டணம்-அது என்ன?
******
விடைகள்:

1.நிலா   2.மின்னல்,இடி,மழை.  3.வெள்ளைப்பூண்டு   4.தேங்காய்.    5.ஆமை    6.தேன்கூடு.    7.பேன்.   8.கிளி   9.குருவிக்கூடு.   10.சந்தை.