தேசத்தில் பாதி
இருளில் முழ்கிவிட்டதாம்.
மின்சாரம் இல்லாமல்
பாதி இந்தியா
பரிதவிக்கிறதாம்.
இந்தியாவின் எதிர்காலம்
இருண்டுவிட்டதாக
எதிர்கட்சிகள்
ஏங்கி தவிக்கிறதாம்.
கடைசி பேட்டியில்
கண்ணீர் சிந்திய
எதிர்க்கட்சி தலைவர்
இறுதியாய் விடுத்த
எச்சரிக்கையில்
அடுத்த தேர்தலில்
ஆட்சி தம் கையில்
என்று அறிவித்தார்.
இனி!
ஆளும்கட்சி நடத்தும்
அடுத்த காட்சி இது . . .
அமைச்சர்கள் மாற்றி
நம்பிக்கை நாடகம்
அரங்கேறிவிட்டது .
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது இங்கே.
நில் தேசமே!
குனிந்து நின்று
கும்பிட்டது போதும்.
கலசங்கள் தாங்கும்
கோபுரம் நீ!
உன்
உயரத்தில் பாதிதான்
உலகத்தின் முதல் சிகரம்.
ஊமைகள் கைதட்டிதான்
இங்கே
ஒருமைப்பாடே
உற்பத்தி செய்யப்படுகிறது.
மனுக்கள் தூங்கும்
மடியாகிவிட்டதே
இந்தியாவின்
மூத்த நீதிமன்றம்.
தண்ணீர் வருவதற்கு பதிலாக
கண்ணீர் வருகிறதே!
இது தாய் நாடா?
அல்லது
தரித்திரத்தின் வீடா?
யந்திரத்தனமாய்
எழுதிய தீர்ப்பு எல்லாம்
காவேரி நதியின்
கடைமடை வரையிலும்
சிதறிக்கிடகிறது.
மடை திறந்து
மணல் மட்டும்
கொள்ளை போகிறது.
இங்கே
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது.
தேசம் முழுமையும்
தேம்பி அழுகிறது.
போகட்டும்
இனியாவது
அன்பு விளம்பு!
பக்கத்து வீட்டுக்கு
தாகம் தவிர்க்க
தண்ணீர் கொடு!
களை முளைக்கும் வரை
காத்திருக்காமல்
புலர் வானத்தில்
முகம் பார்த்து
உன் புன்னகையை
உறுதி செய்.
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது.
இன்றைக்கு
மொத்த நாடும்தான்
முகாரி இசைக்கிறது.
இதற்கு
தேர்தல் மட்டும்
தீர்வு அல்ல.
நல்லவன் முகவரி மட்டும்
நாட்டோர் கைக்கு
கிடைக்கவேண்டும்.
மின்சாரம் போனால்
மீட்டு எடுக்கலாம்
ஆனால்
தாய் நாடும்
தன் மானமும் போனால் . . .
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது?
இருளில் முழ்கிவிட்டதாம்.
மின்சாரம் இல்லாமல்
பாதி இந்தியா
பரிதவிக்கிறதாம்.
இந்தியாவின் எதிர்காலம்
இருண்டுவிட்டதாக
எதிர்கட்சிகள்
ஏங்கி தவிக்கிறதாம்.
கடைசி பேட்டியில்
கண்ணீர் சிந்திய
எதிர்க்கட்சி தலைவர்
இறுதியாய் விடுத்த
எச்சரிக்கையில்
அடுத்த தேர்தலில்
ஆட்சி தம் கையில்
என்று அறிவித்தார்.
இனி!
ஆளும்கட்சி நடத்தும்
அடுத்த காட்சி இது . . .
அமைச்சர்கள் மாற்றி
நம்பிக்கை நாடகம்
அரங்கேறிவிட்டது .
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது இங்கே.
நில் தேசமே!
குனிந்து நின்று
கும்பிட்டது போதும்.
கலசங்கள் தாங்கும்
கோபுரம் நீ!
உன்
உயரத்தில் பாதிதான்
உலகத்தின் முதல் சிகரம்.
ஊமைகள் கைதட்டிதான்
இங்கே
ஒருமைப்பாடே
உற்பத்தி செய்யப்படுகிறது.
மனுக்கள் தூங்கும்
மடியாகிவிட்டதே
இந்தியாவின்
மூத்த நீதிமன்றம்.
தண்ணீர் வருவதற்கு பதிலாக
கண்ணீர் வருகிறதே!
இது தாய் நாடா?
அல்லது
தரித்திரத்தின் வீடா?
யந்திரத்தனமாய்
எழுதிய தீர்ப்பு எல்லாம்
காவேரி நதியின்
கடைமடை வரையிலும்
சிதறிக்கிடகிறது.
மடை திறந்து
மணல் மட்டும்
கொள்ளை போகிறது.
இங்கே
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது.
தேசம் முழுமையும்
தேம்பி அழுகிறது.
போகட்டும்
இனியாவது
அன்பு விளம்பு!
பக்கத்து வீட்டுக்கு
தாகம் தவிர்க்க
தண்ணீர் கொடு!
களை முளைக்கும் வரை
காத்திருக்காமல்
புலர் வானத்தில்
முகம் பார்த்து
உன் புன்னகையை
உறுதி செய்.
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது.
இன்றைக்கு
மொத்த நாடும்தான்
முகாரி இசைக்கிறது.
இதற்கு
தேர்தல் மட்டும்
தீர்வு அல்ல.
நல்லவன் முகவரி மட்டும்
நாட்டோர் கைக்கு
கிடைக்கவேண்டும்.
மின்சாரம் போனால்
மீட்டு எடுக்கலாம்
ஆனால்
தாய் நாடும்
தன் மானமும் போனால் . . .
பாதி இந்தியா மட்டுமா
பரிதவிக்கிறது?