குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதேனும் ஒருவகையில் அடம் பிடிப்பவராகவே இருக்கிறோம். புகைபிடிப்பவர் அதை நிறுத்தவேண்டும் என்று நினைத்தாலும் அதை நாளை முதல், பிறந்த நாள் முதல் நிறுத்திவிடலாம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வருகிறார். இதே போல ஒவ்வொருமுறை மாதாந்திர வீட்டுபாடம் வரும் போது மாணவர்கள் அதை கடைசி வாரம் வரை தள்ளிப்போடுவதும் பரவலாக காணலாம்.
தலைமுறை இடைவெளியில்லாது இந்த தள்ளிப்போடும் பழக்கம் உள்ளது
நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
நலமாய் இன்றே முடித்திடலாம்
என்பது முதல் இன்றைய பாடல்கள் வரை இதை வலியுறுத்துகின்றன
கீழே உள்ளது போல பிடிவாத நிலையில் உள்ளவரிடம் பலன்களை எடுத்துகூறி அவரை தயார்நிலைக்கு எப்படி பக்குவப்படுத்துவது என்பதை காணலாம்.
தயார் நிலை << குழப்பநிலை << பிடிவாத நிலை
பழக்கத்தை மாற்ற விரும்பும் ஒருவர் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தால் அவரை எப்படி ஊக்குவிப்பது? இதற்கு மனநிலையாளர்கள் இரண்டு வழிகளை கூறுகின்றனர்.
ஒன்று: நேர்முக ஊக்குவித்தல், மற்றொன்று எதிர்வினை ஊக்குவித்தல்.
நேர்முக ஊக்குவிக்கும் முறை: குழந்தைகளிடம் அவர்கள் நேரத்துடன் வீட்டு பாடங்களை முடித்தால் அவர்களுக்கு ஒருவித ஊக்கமாக விளையாட்டு நேரத்தை அதிகரிக்கலாம் அல்லது அவர்கள் விரும்பும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தரலாம். ஆனால் இது நாளடைவில் தாங்களாகவே செய்யும் வேலைகளுக்கு கூட ஒருவித பரிசை எதிர்பார்க்க செய்துவிடும். ஆகையால் இம்முறையை மிகவும் கவனமாக கையாளவேண்டும். இதற்கு மாறாக பலன்களை அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக்கூறலாம். இதையே மனைவியோ கணவனோ முயற்சி செய்யும் போது நச்சரித்துக் கொண்டே இருக்க கூடாது. புகைப்பதை நிறுத்து என்றும், இல்லாவிடின் பேச மாட்டேன் என்றும் பயமுறுத்தும் போது அது மறைமுகமாக அதே செயல் செய்யத் தூண்டும். இங்கே கணவன் மனிவியிடையே ஒரு ஈகோ மோதலும், மன வருத்தங்களும், பெற்றோரானால் பிள்ளைகளிடம் ஒருவித குற்ற மனப்பான்மையும் தோன்றும்.
ஒரு அட்டவணையாக அத்தனை பலன்களையும் பட்டியலிட்டு, அதற்கான முயற்சிகளையும் பட்டியலிட்டு அடிக்கடி பார்க்கும் இடத்தில் வைத்து விட்டாலே போதுமானது.
எதிர்மறை ஊக்குவிக்கும் முறை: குழந்தைகள் தங்கள் வீட்டுவேலைகளை முடிக்காவிடில், விளையாட்டு நேரத்தை குறைப்பது, அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைப்பது போன்ற கட்டுப்பாட்டை விதிக்கலாம். ஆனால் இதற்கு, குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றில் கட்டுபாடு வரவேண்டும். எடுத்துக்காட்டாக, விளையாட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லாத குழந்தையிடம் ஆசிரியைகள் அத்தகைய கட்டுப்பாட்டை விதித்தால், அது விளையாட்டு நேரத்தை தவிர்க்க ஒருவித தூண்டுகோலாகிவிடும். பெரும்பாலான பள்ளிகளில் இத்தகு முறைகளையே கடைபிடிக்கிறார்கள்.
ஒரு பழக்கம் மாற்ற முயற்சி செய்யும் மனிதனும் மருத்துவரும் கீழ்க்கண்ட வினாக்களை பற்றி கலந்துரையாட வேண்டும்:
இதை எதற்காக செய்ய வேண்டும்
என்ன நன்மைகள் விளையும்
செய்யாவிட்டால் வரும் தீமைகள் என்ன
செய்யப்போவதால் வரும் துன்பங்கள் /கஷ்டங்கள், என்ன
செய்யவேண்டுமானால் எத்தனை செலவாகும் (பொருள், நேரம், விட்டுக்கொடுப்பது என்ன, குடும்பத்தின் ஒத்துழைப்பு)
நம்மால் செய்ய முடியுமா ?
இத்தனை விரிவாக பேசியபின், ஒரு காலவரையறை தரவேண்டும். அதன்பின் அதனை கடைபிடிக்க வழிமுறைகள் சொல்வதோடு, அதற்கு ஏதுவாக ஒத்துழைப்பும் தரவேண்டும். இதற்கு மருத்துவர்தான் வேண்டும் என்பதில்லை. குழந்தைகளின் பழக்கத்தில் மாற்றம் தேவைப்படும் என நினைக்கும் பெற்றோர், மற்ற உறவினர்கள் கூட முயற்சி செய்யலாம்
கீழே உள்ள அட்டவணை பழக்கத்தை திருத்த தேவையான முதல்படியாகும்:
மனநிலையில் ஒற்றுமை படுத்தல் >> கலந்துபேசி ஒப்புக்கொள்ளுதல் >> மாறவேண்டிய பழக்கம் >> மாற்றுவதனால் வரும் நன்மைகள், மன உறுதி >> மன உறுதியை மேலும் அதிகப்படுத்துதல், ஒத்துழைப்பு தர ஒப்புக்கொள்ளல்