ஏதாவது முக்கியமான பிரச்சினைக்கு முடிவு காண இயலாத சூழ்நிலையில் ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு பூவா தலையா என்று பார்த்து முடிவெடுக்கும் பழக்கம் அனேகரிடம் உண்டு அல்லவா?இந்தப் பழக்கம் எப்படி வந்தது?இதற்கு காரணகர்த்தா யார்?உளவியலின் தந்தை சிக்மன்ட் பிராய்ட் தான், முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த தன நண்பர்களுக்கு
இந்த வழியை சொல்லிக் கொடுத்தவர்.இதை மூடப் பழக்கம் என்று நிறையப் பேர் நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு யோசனையை எப்படி ஒரு பெரிய அறிஞரான பிராய்ட் சொன்னார்.ஒரு நாணயம் ஒரு மனிதனின் பிரச்சினைக்கு முடிவு காண்பதா?இந்தக் கேள்விக்கு அவரே விடை சொன்னார். ''ஒரு மனிதன் முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒரு நாணயத்தை சுண்டிப் பார்க்க வேண்டும்.அவன் பூ என்று நினைத்து பூவே விழுந்து விட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா ,வருத்தம் ஏற்படுகிறதா என்று அவனே கவனித்துப் பார்க்க வேண்டும்.மகிழ்ச்சி ஏற்பட்டால் அந்தக் காரியத்தை செய்யலாம்.வருத்தம் ஏற்பட்டால் அதை நிறுத்தி விடலாம்.தலை விழுந்தாலும் இதே லாஜிக் தான்.''இப்போது சொல்லுங்கள்,இது மூடப்பழக்கமா?சரியான முடிவை எடுக்க ஒரு சரியான வழிதானே!