ஒரு கணவன் தன மனைவி,குழந்தையுடன் தன மாமனார் ஊருக்கு காரில் செல்லும்போது பாதை தவறி நேரமாகிவிட்டது.சரியான பாதை கண்டு பிடித்து செல்கையில் வழியில் இஞ்சின் நின்று விட்டது.உடனே கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் குறை கூறி ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்தார்கள்.குழந்தை இடைமறித்து,''நேரமாகுதே!சண்டை போடுவதற்குப் பதிலாக ஒருவர் தள்ள ஒருவர் ஸ்டார்ட் பண்ணினால் வண்டி ஓடுமே ,''என்று சொல்ல,மனைவி காரைத் தள்ள கணவன் ஸ்டார்ட் செய்தான்.குழந்தையும் காரினுள் உட்கார்ந்தவாறே தன கையினால் முன் இருக்கையை தள்ளுவதுபோல முயற்சி செய்தது.இஞ்சின் ஓட ஆரம்பித்தது.குழந்தை கைகொட்டிச் சிரித்துக் கொண்டே,''நான் தள்ளியதால்தானே கார் ஓடுகிறது?''என்று கேட்டது.இந்தக் குழந்தை போலத்தான் நாம் ஏதாவது செய்துவிட்டு நம்மால்தான் அந்தக் காரியம் முடிந்தது என்று நினைக்கிறோம்.கூறிக் கொண்டு அலைகிறோம்.