திருமணத்திற்காய் ஒரு பெண் காத்திருக்கிறாள்

பருவத்தை அடைந்து
பலகாலம் ஆயிடுச்சு

மூபத்து கடந்துபோயி

முதிர் கன்னி ஆயிப்புட்டேன்..!


வாரத்துக்கு ரெண்டுபேரு

பெண்பார்க்க வராங்க

முத்துன கத்தரிக்காயாம் -ஒருத்தன்

மூஞ்சிலையே சொல்லிப்புட்டான்..!


பெத்துப்போட்டு சலிச்சவங்க

பேதை என்னை வெறுக்கிறாங்க

சீதேவி என்னு பேருவச்சும்

மூதேவின்னு திட்டுறாங்க..!


உடன்பிறந்த இளசெல்லாம்

புருஷன் வீடு போயிடுச்சு

என்ன குறையோ இவளுக்கென்னு

ஊரும் குத்தலா பேசுதிப்ப..!


என் கண்ணாடி மனசத்தான்

கல்லால அடிக்கிறாங்க

கல்லாலான கடவுளுக்கும்

என்ன காப்பாத்த கண்ணில்ல..!


கூட பொறந்ததெல்லாம்

கரசேக்க வேணுமுன்னு

வயச மறந்து ஒழச்சிபுட்டன்

காலமுருண்டு ஓடிடிச்சி ..!


காகிதக் கப்பல் போல

தள்ளாடுது என் வாழ்க்க

கலங்கரை விளக்கம் தேடி

கரைசேர காத்திருக்கேன்..!


உறக்கமில்லா கண்களிலே

ஒருகோடி கனவிருக்கு

செத்துப்போன ஒடம்போட

இத்துப்போன என் மனசிருக்கு..!


காத்திருக்கேன்.. விழிபூத்திருக்கேன்..

காளையர் முகமின்னும் காணலயே

கண்மை கரைவதுபோல்

என் பெண்மையும் உருகுதிங்கே ..!


வெறுத்திருக்கேன்.. பொறுத்திருக்கேன்

எனக்கும் ஒரு நாளிருக்கு

எதுவுமே நடக்கலேனா
??
அரளிவித எதுக்கிருக்கு
………!