வழி நெடுக
ரெக்கைகள் உதிர்ந்தது தான்
மிச்சம்.
வெறுமைக்கு
மவுனமும்
மவுனத்துக்கு
வெறுமையுமே
தூதுகளாய்
வந்தன சென்றன.
ஐ லவ் யூ டான்னு
எப்பவோ
பலுனை உடைக்கிறதுக்குப்பதில்
மலையை
மயிரிழையால் கட்டி
இழுத்து..இழுத்து
"காதலித்துக்கொண்டே
முதியோர் இல்லம் நோக்கி"
தேர்
வந்தாயிற்று.
இலவு காத்த கிளிகளுக்காவது
பஞ்சு வெடித்து சிதறுவது
புரிந்து விடும்.
பாவம்!
இந்த "நிலவு"காத்த கிளிகள்
"நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம்" போய்
உறுதி செய்து கொள்ளட்டும்
இவர்களின்
"பறக்கும் முத்தங்களின்"
பாதச்சுவடுகள்
அங்கு உதடு பதித்திருக்கிறதா
என்று?
நம்பிக்கையை
ஜென் பாணியில்
சொல்ல
ஒரு கடலும்
ஒரு தேக்கரண்டியும் வேண்டும்.
தேக்கரண்டியை வைத்து
கடல் நீரை அள்ளி அள்ளி
தூர்த்துவிடலாம்.
இங்கே
கடல் தான் காதல்.
காத்திருக்கும் நிமிடங்களே
"தங்கத்தால் ஆன தேக்கரண்டிகள்"
எங்கே கண்டுபிடித்து
வரைந்தார்
அந்த அன்னத்தையும்
தமயந்தியையும்
ரவிவர்மா!
யாருக்கு யாரை தூதுவிட?
அன்னத்தைக்கொண்டு
அன்னத்துகேயா?
ஒரு அன்னம்
இன்னொரு அன்னத்தை
காதலித்ததனால்
இரண்டும்
அங்கேயே நிற்கின்றன!
ரெக்கைகள் உதிர்ந்தது தான்
மிச்சம்.
வெறுமைக்கு
மவுனமும்
மவுனத்துக்கு
வெறுமையுமே
தூதுகளாய்
வந்தன சென்றன.
ஐ லவ் யூ டான்னு
எப்பவோ
பலுனை உடைக்கிறதுக்குப்பதில்
மலையை
மயிரிழையால் கட்டி
இழுத்து..இழுத்து
"காதலித்துக்கொண்டே
முதியோர் இல்லம் நோக்கி"
தேர்
வந்தாயிற்று.
இலவு காத்த கிளிகளுக்காவது
பஞ்சு வெடித்து சிதறுவது
புரிந்து விடும்.
பாவம்!
இந்த "நிலவு"காத்த கிளிகள்
"நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம்" போய்
உறுதி செய்து கொள்ளட்டும்
இவர்களின்
"பறக்கும் முத்தங்களின்"
பாதச்சுவடுகள்
அங்கு உதடு பதித்திருக்கிறதா
என்று?
நம்பிக்கையை
ஜென் பாணியில்
சொல்ல
ஒரு கடலும்
ஒரு தேக்கரண்டியும் வேண்டும்.
தேக்கரண்டியை வைத்து
கடல் நீரை அள்ளி அள்ளி
தூர்த்துவிடலாம்.
இங்கே
கடல் தான் காதல்.
காத்திருக்கும் நிமிடங்களே
"தங்கத்தால் ஆன தேக்கரண்டிகள்"
எங்கே கண்டுபிடித்து
வரைந்தார்
அந்த அன்னத்தையும்
தமயந்தியையும்
ரவிவர்மா!
யாருக்கு யாரை தூதுவிட?
அன்னத்தைக்கொண்டு
அன்னத்துகேயா?
ஒரு அன்னம்
இன்னொரு அன்னத்தை
காதலித்ததனால்
இரண்டும்
அங்கேயே நிற்கின்றன!