· வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நாரத்தங்காயை வட்ட வட்டமாயநறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும்.
· இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்தி வரவும். இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரதுண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.
· நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மமவயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
· நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சலஉடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
· நாரத்தை பழத்தை சாறு பிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையுமதணிக்கும்.
· நாரத்தங்காய் இலைகைள நரம்பு நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
· இப்படி சாப்பிட்டு வர பித்தம் குறையும். கர்ப்ப காலத்தில்ஏற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்தி நிற்கும். பயின்மை குறைந்து நன்கு பசிக்கும்.
· பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமை பிரச்சினை வரவே வராது.
· சாப்பிட்டதும் ஏப்பம் வந்து கொண்டிருந்தாலும், ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன் கிட்டும்.
· வயிற்றில் வாயுப் பிரச்சினை ஏற்படும் நிலையில் ஒருஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று திண்ணால் வாயுக் கோளாறு விரைவில் நீங்கும்.