நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்.ஒரு முறை அவர் மதுரையில் கோவலன் கண்ணகி நாடகம் போட்டார்.நாடகத்தில் கண்ணகி கோவலனைப் பார்த்துப் பாடுகிறார்:''மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு, மன்னா இன்று போகாதீர்.''
நாடகம் பார்க்க வந்திருந்தோர் கூச்சலிட ஆரம்பித்தனர்,''நம் ஊருக்கு வந்து நம் ஊரையே பழித்துப் பாடுவதா?''என்பதே அவர்களது ஆதங்கம்.சுவாமிகள் உடனே மேடைக்கு வந்து முதலில் எல்லோரையும் அமைதிப்படுத்தி விட்டு பின் பேசினார்,''என்னுடைய பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.'மா' என்றால் திருமகள் என்று பொருள்.'பா'என்றால் கலைமகள் என்று பொருள்.'வி'என்றால் மலைமகள்.மாபாவியோர் என்றால் திருமகளும்,கலைமகளும்,மலைமகளும் ஆகிய மூவரும் என்று பொருள். இந்த மூன்று பெரும் வாழ்கின்ற பெருமையுடைய மதுரையில் நான் அணிந்து கொள்ளும் இந்த சாதாரண சிலம்பை யார் வாங்குவார்கள் என்ற எண்ணத்துடன் கண்ணகி பாடுவதாக நான் எழுதியுள்ளேன்.மதுரையைப் பழிக்கும்எண்ணம் கொஞ்சம் கூட எனக்குக் கிடையாது.,''இதைக் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம்.