1.சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்
மோசமானவை ஒரு போதும் நிகழாது...
... 2.திருப்தியான மனம் தான் உலகில்
ஒருவனக்குக் கிடைக்க கூடிய உயர்ந்த ஆசீர்வாதம்...
3.நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால்
நேசிக்கப்படும் தன்மையோடு இருங்கள்...
4.தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவராலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது...
5.எப்பொழுதும் அன்பாய் இருங்கள்... நேற்றைப் பற்றி கவலையும்...
இன்றைய... நாளைய பயமும் இருக்காது... அன்பு காலத்தைக் கடந்தது...
6.இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...
7.இன்றைய தினத்தை புதிய நாளாக மாற்றுங்கள்...
நாளைய தினம் ஆக்கப்பூர்வமான பொழுதாக விடியும்...
8.நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...
9.உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...
10.சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...